தேர்தலில் பா.ஜனதாவை மக்கள் ஆதரிக்க மாட்டார்கள் தினேஷ் குண்டுராவ் கணிப்பு
கடந்த பா.ஜனதா ஆட்சியில் 10 மந்திரிகள் சிறைக்கு சென்றனர். எனவே வருகிற தேர்தலில் பா.ஜனதாவை மக்கள் ஆதரிக்க மாட்டார்கள் என்று தினேஷ் குண்டுராவ் கூறினார்.
பெங்களூரு,

10 பேர் சிறைக்கு சென்றனர்
பெங்களூரு மகாலட்சுமி லே-அவுட்டில் காங்கிரஸ் சார்பில் ‘நமது பெங்களூரு நமது பெருமை‘ என்ற பெயரில் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் செயல் தலைவர் தினேஷ் குண்டுராவ் கலந்து கொண்டு பேசியதாவது:-
பா.ஜனதா ஆட்சியில் மந்திரிகளாக இருந்தவர்களில் 10 பேர் சிறைக்கு சென்றனர். நில முறைகேடு, கனிம வளங்கள் முறைகேடுகளில் பல மந்திரிகள் சிறைக்கு சென்றனர். இது கர்நாடகத்திற்கு ஏற்பட்ட களங்கம். நில முறைகேடு புகாரில் முதல்-மந்திரியாக இருந்தவரே சிறைக்கு சென்றார். இது நாட்டிலேயே பா.ஜனதாவின் பெரிய சாதனை ஆகும். அதனால் பா.ஜனதாவை மக்கள் ஆதரிக்க மாட்டார்கள்.
பெருமைக்கு களங்கம்
பூங்கா நகரமாக இருந்த பெங்களூருவுக்கு குப்பை நகரம் என்ற பெயரை பெற்று தந்தவர்கள் பா.ஜனதாவினர். இதனால் நகரின் பெருமைக்கு களங்கம் ஏற்பட்டது. நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு இந்த களங்கத்தை போக்கினோம். பெங்களூரு மாநகராட்சியை பா.ஜனதா ஆட்சி செய்தபோது நகரின் பாரம்பரிய கட்டிடங்களை வங்கிகளில் அடமானம் வைத்தனர். நாங்கள் கடனை அடைத்துவிட்டு அந்த கட்டிடங்களை வங்கிகளில் இருந்து மீட்டோம். நகரின் பெருமையை காங்கிரஸ் காப்பாற்றியுள்ளது.
இவ்வாறு தினேஷ் குண்டுராவ் பேசினார்.
இதைதொடர்ந்து போக்குவரத்து மந்திரி எச்.எம்.ரேவண்ணா பேசுகையில், “கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு அமைந்த பிறகு நமது மாநிலம் தேசிய அளவில் பல்வேறு துறைகளில் முதல் இடத்தில் உள்ளது. முந்தைய பா.ஜனதா ஆட்சியில் கர்நாடகம் 11-வது இடத்தில் இருந்தது. பா.ஜனதா தலைவர் அமித்ஷா வியாபாரம் செய்ய கர்நாடகத்திற்கு வந்துள்ளார். அவருடைய வியாபார மனநிலையை மக்கள் ஆதரிக்க மாட்டார்கள்” என்றார்.

Related Tags :
Next Story