தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்திய 4 பேர் கைது


தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்திய 4 பேர் கைது
x
தினத்தந்தி 31 March 2018 3:15 AM IST (Updated: 31 March 2018 3:13 AM IST)
t-max-icont-min-icon

தடை செய்யப்பட்ட புகை யிலை பொருட்களை காரில் கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

சங்கணாச்சேரி,

கோட்டயம் மாவட்டம் சங்கணாச்சேரி-ஆலப்புழை சாலையில் மனக்குச்சிபாறை பகுதியில் சங்கணாச்சேரி போலீஸ் துணை சூப்பிரண்டு ஸ்ரீகுமார் தலைமையிலான போலீசார் வாகன சோதனை யில் ஈடுபட்டனர். அப்போது பத்திரிகையாளர் ஸ்டிக்கர் ஒட்டிய கார் மின்னல் வேகத் தில் வந்தது.

இதைக்கண்ட போலீசார் அந்த காரை மறித்து சோதனை செய்தனர். அப்போது காரில் 5 சாக்குமூட்டைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக காரில் வந்த 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் தமிழ்நாடு தூத்துக்குடியை சேர்ந்த சுடலைமுத்து (வயது 35), செய்துங்கநல்லூர் மேல தூதுகுழியை சேர்ந்த முத்து ராமலிங்கம் (27), திரு வைகுண்டத்தை சேர்ந்த மந்திரமூர்த்தி (24), தென்காசி அருகே உள்ள பாவூர்சத்திரம் காமராஜ் தெருவை சேர்ந்த முருகன் (29) என்பது தெரிய வந்தது.

பத்திரிக்கையாளர் என்ற போர்வையில் அவர்கள் தமிழ கத்தில் இருந்து புகையிலை பொருட்களை கேரளாவுக்கு கடத்தியது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 4 பேரையும் கைது செய்தனர். மேலும் புகையிலை பொருட்களும், கடத்தலுக்கு பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப் பட்டது.

Next Story