மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலைப்பாதையில் செல்லும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறக்கூடாது, போலீசார் எச்சரிக்கை


மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலைப்பாதையில் செல்லும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறக்கூடாது, போலீசார் எச்சரிக்கை
x
தினத்தந்தி 31 March 2018 3:15 AM IST (Updated: 31 March 2018 3:15 AM IST)
t-max-icont-min-icon

மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலைப்பாதையில் செல்லும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறக்கூடாது என்று போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

குன்னூர்,

மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு செல்லும் மலைப்பாதையில் கல்லார்- குன்னூர் இடையே 14 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இது மட்டுமின்றி மறைமுக வளைவுகள், குறுகிய பாலங்கள் போன்றவை உள்ளது. சமவெளி பகுதியில் இருந்து வரும் பெரும்பாலான வாகனங்கள் குன்னூர்- மேட்டுப்பாளையம் வழியாகதான் ஊட்டிக்கு வருகின்றன.

இந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் அறிந்து செல்லும் வகையில் போலீசார் எச்சரிக்கை பலகைகளை வைத்து உள்ளனர். மலைப்பாதையில் இடது புறமாக செல்ல வேண்டும், வளைவுகளில் முந்தி செல்வதை தவிர்க்க வேண்டும். மதுஅருந்திவிட்டு கட்டாயம் வாகனம் ஓட்டக்கூடாது என்பன உள்ளிட்ட எச்சரிக்கை வாசகங்களை எழுதி வைத்துள்ளனர். ஆனால் இதை வாகன ஓட்டிகள் முறையாக கடைபிடிப்பது இல்லை.

இந்த சாலையில் வளைவில் முன்னே செல்லும் கனரக வாகனங்களை குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் இடது புறமாக முந்தி செல்கின்றனர். அந்த சமயத்தில் கனரக வாகனம் நேராக திரும்பும்போது இடது புறமாக வேகமாக செல்லும் இருசக்கர வாகனங்களின் மீது மோதி விபத்து ஏற்படும் நிலை உள்ளது.

எனவே இடதுபுறத்தில் வாகனங்களை மலைப்பாதையில் முந்திசெல்வதை கைவிட்டு வலது புறத்தில் முன்னே செல்லும் வாகனத்தின் டிரைவருக்கு தெரியும் வகையில் செல்ல வேண்டும். முன்னால் செல்லும் வாகன ஓட்டுனர் சைகை காட்டிய பின்னரே பின்னால் செல்லும் வாகன ஓட்டுனர்கள் முந்தி செல்ல வேண்டும்.

இந்த நிலையில் விரைவில் சீசன் தொடங்க உள்ளதால் அதிக அளவில் வாகனங்கள் வந்து செல்லும். அப்போது வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த போலீசார் முன்வர வேண்டும். இதற்கிடையே நேற்று முன்தினம் முதல் தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளது. இந்த விடுமுறைக்கு ஊட்டிக்கு அதிக அளவு சுற்றுலா பயணிகள் வானங்களில் வந்து செல்கிறார்கள். இந்த நேரத்தில் வாகன ஓட்டிகள் மலைப் பாதையில் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story