கிறிஸ்தவ ஆலயங்களில் புனித வெள்ளி பிரார்த்தனை திரளானோர் கலந்து கொண்டனர்
மும்பையில் உள்ள ஆலயங்களில் நடந்த புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனையில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
மும்பை,

புனித வெள்ளி
ஏசு சிலுவையில் அறையப்பட்ட நாளை கிறிஸ்தவர்கள் புனித வெள்ளியாக கடைபிடித்து வருகின்றனர். நேற்று புனித வெள்ளியையொட்டி மும்பை முழுவதும் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனை நடந்தது. கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில் ஏசு சிலுவையில் அறையப்பட்டதை தத்ரூபமாக காட்டும் வகையில் சிலுவை பாதை நடந்தது. இதில் ஏசு வேடமணிந்த ஒருவர் சிலுவையை சுமந்து சென்ற காட்சி மனதை உருக வைத்தது. மும்பை முழுவதும் நடந்த புனித வெள்ளி சிறப்பு பிரார்தனையில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ் ஆலயங்கள்
சாந்தாகுருஸ் மேற்கு திருஇருதய ஆலயத்தில் இருந்து வக்கோலா தூய சார்லஸ் ஆலயம் வரை நடந்த புனித வெள்ளி ஊர்வலத்தில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இதேபோல மாகிம் மிக்கேல் ஆலயம், மாட்டுங்கா டான் போஸ்கோ, பாந்திரா மலை மாதா உள்ளிட்ட ஆலயங்களிலும் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
இதேபோல தாராவியில் அந்தோணியார் ஆலயம், காட்கோபர் காமராஜர் நகர் அந்தோணியார் ஆலயம் உள்ளிட்ட மும்பை முழுவதும் உள்ள தமிழ் ஆலயங்களில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
நவிமும்பையில் சுமார் 1000 கிறிஸ்தவர்கள் கோபர்கிரைனே குழந்தை ஏசு ஆலயத்தில் இருந்து வாஷியில் உள்ள தூய தாமஸ் ஆலயம் வரை பேரணியாக சென்றனர். இதேபோல தானேயிலும் புனித வெள்ளியையொட்டி ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

Related Tags :
Next Story