பவானி ஆற்றங்கரையோர தோட்டத்தில் 13 விவசாய மின்இணைப்புகள் துண்டிப்பு
பவானி ஆற்றங்கரையோரத்தில் 13 விவசாய மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது.
பவானிசாகர்,
பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் குடிநீர் தேவைக்காக 200 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. பவானிசாகர் முதல் பவானி வரை செல்லும் தண்ணீரை மின்மோட்டார் மூலம் நீரேற்றம் செய்து சுத்திகரித்து குடிநீர் தேவைக்காக சத்தியமங்கலம், கோபி மற்றும் பவானி நகராட்சிகள் உள்பட 10-க்கும் மேற்பட்ட பேரூராட்சிகள் மற்றும் ஆயிரக்கணக்கான கிராமங்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பவானி ஆற்றங்கரையோரத்தில் உள்ள கிணறுகளுக்கு விவசாயதோட்டபயன்பாட்டிற்காக மின்மோட்டார்கள் மூலம் ஆற்று நீரை உறிஞ்சுவதால் குடிப்பதற்கு தண்ணீர் வருவதில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தார்கள்.
இதைத்தொடர்ந்து சத்தியமங்கலம் தாசில்தார் கிருஷ்ணன், பொதுப்பணித்துறை உதவிப்பொறியாளர் ராமசாமி மற்றும் மின்வாரியத்தினர் அங்கு சென்று ஆய்வு செய்தனர். அதில் கெஞ்சனூர் பகுதியில் ஆற்றங்கரையோரத்தில் உள்ள கிணறுகளில் விவசாய தோட்ட பயன்பாட்டிற்காக மின்மோட்டார்கள் மூலம் நீரை உறிஞ்சுவது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து 13 விவசாய மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது.
Related Tags :
Next Story