பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கவர்னர் கிரண்பெடி டெல்லி சென்றார்


பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கவர்னர் கிரண்பெடி டெல்லி சென்றார்
x
தினத்தந்தி 31 March 2018 4:45 AM IST (Updated: 31 March 2018 4:36 AM IST)
t-max-icont-min-icon

கவர்னர் கிரண்பெடி திடீரென்று டெல்லிக்கு சென்றுள்ளார். பரபரப்பான சூழ்நிலை இருந்து வரும் நிலையில் அவரது இந்த பயணம் புதுவையில் மேலும் பரபரப்பை அதிகரித்துள்ளது.

புதுச்சேரி,

மத்திய அரசால் நேரடியாக நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமிக்கப்பட்ட பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோர் ஐகோர்ட்டு உத்தரவினை பெற்று சட்டசபைக்கு சென்றபோது அவர்கள் சபாநாயகர் உத்தரவின் பேரில் அனுமதிக்கப்படவில்லை. இதுகுறித்து பாரதீய ஜனதா கட்சியினர் கவர்னர் கிரண்பெடியிடம் புகார் செய்தனர்.

அந்த புகாரின் அடிப்படையில் நடந்த சம்பவங்கள் குறித்து அறிக்கை அளிக்குமாறு கவர்னர் கிரண்பெடி தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து போலீசாரிடம் விசாரணை நடத்தி தலைமை செயலாளர், கவர்னருக்கு அறிக்கை அளித்தார்.

இந்த அறிக்கையை பரி சீலித்த கவர்னர் தனது கருத்தையும் பதிவு செய்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பினார். புதுவை அரசு மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக கவர்னர் தனது அறிக்கையில் கருத்துகளை பதிவு செய்து அனுப்பி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று கவர்னர் கிரண்பெடி டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

டெல்லியில் வருகிற 4-ந்தேதி வரை தங்கி இருக்க அவர் திட்டமிட்டுள்ளார். அப்போது அவர் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேச வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது புதுவை அரசின் செயல்பாடு, அறிக்கை விவரங்கள் குறித்து விளக்கம் அளிப்பார் என்று தெரி கிறது.

இது தொடர்பாக கவர்னர் மாளிகை வட்டாரங்களில் விசாரித்தபோது, டெல்லியில் 2 நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக சென்று இருப்பதாகவும் 5-ந்தேதி கவர்னர் புதுச்சேரிக்கு திரும்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

Next Story