பாராட்டுதலுக்குரிய ‘பண்பாட்டு தூதுவர்கள்’...!
சென்னை மண்ணடி பகுதிகளில் ஓடும் ஆட்டோக்கள் அனைத்தும், தம்பு செட்டி சாலையை நோக்கி பறந்து கொண்டிருந்தன.
கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள், போக்குவரத்து நெரிசலான மண்ணடி சாலைகளில் அணிவகுத்ததால், ‘என்ன காரணமாக இருக்கும்?’ என்ற கேள்வியோடு அந்த ஆட்டோக்களை பின் தொடர்ந்தோம். அதில் சில ஆட்டோக்களை பெண்கள் ஓட்டிச்சென்றனர். ஆட்டோக்கள் அனைத்தும் முத்தியால்பேட்டை பள்ளி வளாகத்திற்குள் நுழைய, ஒரு ஆட்டோ டிரைவரை மடக்கி விவரம் கேட்டோம். அங்கு ஆட்டோ ஓட்டுனர்கள் குழுமிக் கொண்டிருக்க, அவர் கொடுத்த விளக்கம் ஆச்சரியம் அளித்தது.
“வாடிக்கையாளர்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளும் ஆட்டோ ஓட்டுனர்களை கவுரவப்படுத்தும் நிகழ்ச்சி இது. அதேசமயம் ஆட்டோ ஓட்டுனர்களின் சிறுசிறு தவறுகளை திருத்திக் கொள்ளும் முயற்சியாகவும் இது அமையும்” என நிகழ்ச்சியின் முன்கதை சொன்னவர், முழுக்கதையையும் தெரிந்து கொள்ள ஏற்பாட்டாளர்களை கைக்காட்டினார். அதில் முதல் ஆளாய் ஜொலித்தவர், இறையன்பு ஐ.ஏ.எஸ். ஆம்..! இந்த நிகழ்ச்சியின் ஆக்கமும், ஊக்கமும் அவரே. ஆட்டோ ஓட்டுனர்களுடன் அமர்ந்து காலை உணவை சுவைத்துக் கொண்டிருந்தவரிடம் நிகழ்ச்சி குறித்து பேச ஆரம்பித்தோம். அவர் பல கேள்விகளுக்கு பதில் கொடுத்தார்.
“ஆட்டோவையும், ஆட்டோ ஓட்டுனர்களையும் சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். அவர்கள்தான் நம் நாட்டின் ‘பண்பாட்டு தூதுவர்கள்’. இந்திய மக்களின் முன் உதாரணங்கள். வெளிநாட்டு பயணிகளிடம் ஆட்டோ ஓட்டுனர்கள் நடந்து கொள்ளும் விதத்தில்தான் தமிழ்நாட்டின் மரியாதையும், இந்தியாவின் பெருமையும் அடங்கி யிருக்கிறது. இதை புரிந்து கொள்ளாமல், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் கடுமையாக நடந்து கொண்டால் அந்த ஆட்டோ ஓட்டுனரின் மதிப்பு மட்டுமல்ல, இந்தியாவின் மதிப்பும் குறைந்து விடும். இதை உணர்த்தவே ‘பண்பாட்டு தூதுவர்கள்’ என்ற நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து, அதன் மூலம் ஆட்டோ ஓட்டுனர்களை சந்தித்து வருகிறோம். தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், ஆட்டோ ஓட்டுனர்களுக்கு பலதரப்பட்ட ஆலோசனைகளும், பயிற்சிகளும் வழங்கப்படுகிறது.
ஆட்டோ ஓட்டுனர்களின் சமூக பொறுப்புகள், பயணிகளிடம் தன்மையாக நடந்து கொள்ளும் விதம், வெளியூர் பயணிகளையும்-வெளிநாட்டு பயணிகளையும் அனுசரிக்கும் முறை... போன்றவற்றை கற்றுக்கொடுத்து, ஆட்டோ ஓட்டுனர்களை நல்வழிப்படுத்துகிறோம். அதேசமயம் அவர்களது தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையிலும் கவனம் செலுத்துகிறோம். ஓட்டுனர் சீருடை வழங்குவது, மருத்துவ முகாம்களை நடத்துவது, வெளிநாட்டு பயணிகளை ஈர்க்க ஆங்கில மொழி பயிற்சி வகுப்புகள் நடத்துவது... போன்ற முயற்சிகளில் இறங்கியிருக்கிறோம்” என்றவர் பொது மக்களுக்கும், ஆட்டோ ஓட்டுனர்களுக்குமான இடைவெளியை குறைத்து, நட்புறவை வளர்ப்பதில் அதிக கவனம் செலுத்துகிறார். மேலும் தொடர்ந்தவர்...
“தமிழகத்தை சுற்றிப்பார்க்க வரும் வெளிநாட்டு பயணிகளின் முதல் விருப்பம், ஆட்டோ சவாரியாகத்தான் இருக்கும். ஏனெனில் பெரும்பாலான நாடுகளில் டாக்ஸி சேவையே நடைமுறையில் இருப்பதால், நம்மூரில் இருக்கும் ஆட்டோக்களில் சவாரி செய்ய ஆசைப்படுகிறார்கள். மேலும் ஆட்டோக்களில் கிடைக்கும் காற்றோட்ட வசதி வேறு எதிலும் கிடைக்காது. இருசக்கர வாகனங்களை போன்று சந்து பொந்துகளில் வளைந்து, நுழைந்து சென்று விடுவதால் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சென்னையை சுற்றிப் பார்க்க ஆட்டோக்களில் கிளம்பி விடுகிறார்கள். அதை ஆட்டோ ஓட்டுனர்கள் சரிவர பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து பிராட்வே வரை சவாரி கிடைத்தால், அதை நம்முடைய பேச்சு திறனாலும், அன்பான நடத்தையாலும் பெரிய சவாரியாக மாற்றி விடலாம். உதாரணத்திற்கு சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு அருகில் இருக்கும் ரிப்பன் மாளிகையின் பழமையை, பெருமையாக சொல்லலாம். பிராட்வேக்கும், சென்ட்ரலுக்கும் இடையில், மிண்ட் சாலையில் நிறைந்திருக்கும் புடவை கடைகளை பற்றி ஆட்டோ பயணிகளிடம் பேசலாம். எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு பிரபலமான சிந்தாதிரிப்பேட்டை பற்றி கூறி அங்கு அழைத்து செல்லலாம். அதற்கு அருகில் இருக்கும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தை சுற்றி காட்டலாம். நீளமான மெரினா கடற்கரையின் பெருமையை சுருக்கமாக கூறி, அங்கு அழைத்து செல்லலாம். அதன் எதிரில் இருக்கும் சென்னை பல்கலைக்கழகத்தை சுற்றி காட்டிவிட்டு, அவர்கள் செல்ல நினைத்த பிராட்வேயில் இறக்கிவிடலாம். இப்படி சாமர்த்தியமாக நடந்துகொண்டால், ஓட்டுனர்களின் பாக்கெட்டும் நிறையும். தமிழகத்தின் பெருமை வெளிநாட்டு பயணிகளுக்கும் புரியும்” என்றார்.
எல்லா சவாரிகளும் நல்ல சவாரியாக அமையாவிட்டாலும், கிடைக்கும் ஒருசில நல்ல சவாரிகளையாவது சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது இறையன்புவின் கருத்து. இவரை தொடர்ந்து விழா மேடையில் அமர்ந்திருந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சபாவிடம் பேசினோம். அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் முன்னாள் மாணவர் இயக்கத்தின் முக்கிய உறுப்பினரான அவர், ஆட்டோ ஓட்டுனர்களுக்காக தயாராகிக்கொண்டிருக்கும் பிரத்யேக செயலி பற்றி பேசினார்.
“ஆட்டோ ஓட்டுனர்கள் எந்த இடத்தில் தவறு செய்கிறார்கள், அதை எப்படி திருத்திக்கொள்வது போன்றவற்றை கற்றுக்கொடுப்பதுடன், பயணிகளிடம் நட்புறவு பாராட்டும் ஓட்டுனர் களுக்கு சிறப்பு விருது வழங்கி கவுரவப்படுத்துகிறோம். இத்தகைய முயற்சிகள் மற்ற ஆட்டோ ஓட்டுனர்களிடம் நல்லதொரு நம்பிக்கையை விதைக்கும். அதோடு ஆட்டோ ஓட்டுனர் களுக்காகவே ஒரு பிரத்யேக மொபைல் அப்ளிகேஷனை தயாரித்து வருகிறோம். இதன் மூலம் ஆட்டோ பயணிகள் தங்களது வீடுகளில் இருந்தபடியே, சவாரியை புக்கிங் செய்யலாம். அதோடு ஆட்டோ ஸ்டாண்டுகளில் நிறுத்தப்பட்டிருக்கும் ஆட்டோக்களுக்கும் அதிக சவாரி கிடைக்கும்” என்றார்.
பெரும்பாலான சேவைகள் மொபைல் அப்ளிகேஷன்களுக்கு மாறிவிட்ட நிலையில், ஆட்டோ சவாரிக்கும் பிரத்யேக அப்ளிகேஷன்களை உருவாக்குவது பாராட்டுதலுக்கு உரியதே. சபாவை தொடர்ந்து நிகழ்ச்சி வேலைகளை மும்முரமாக கவனித்துக்கொண்டிருந்த மகேஸ்வரனிடமும், மண்ணடி முருகனிடமும் பேச முயற்சித்தோம். அவர்கள் பண்பாட்டு தூதுவர்களாய் அமர்ந்திருந்த ஆட்டோ ஓட்டுனர்களை கைக்காட்டிவிட்டு மற்ற வேலைகளை கவனித்தனர். அதில் சக பெண் ஓட்டுனர்களுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த அகிலாவிடம் பேச்சு கொடுத்தோம்.
“தமிழகத்தில் ஏராளமான ஆட்டோக்கள் ஓடுகின்றன. படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற வரைமுறையின்றி, ஓட்டுனர்கள் பெருகிவிட்டனர். சில ஓட்டுனர்கள் அன்பாக பழக்கக்கூடியவர்கள். சிலர் கடுமையாக நடக்கக்கூடியவர்கள். அது ஆட்டோ ஓட்டுனர்களின் குணம் அல்ல, மனித குணம். ஒரு ஆட்டோ ஓட்டுனர் பயணிகளிடம் கடுமையாக நடந்து கொண்டாலும் சரி, மீட்டர் போடாமல் பணம் வசூலித்தாலும் சரி, அது ஒட்டுமொத்த ஆட்டோ ஓட்டுனர்களையும் பாதிக்கும் விஷயமாக மாறிவிடுகிறது. அதை பண்பாட்டு தூதுவர்கள் நிகழ்ச்சியின் மூலம் உணர்ந்து கொண்டதால் எங்களை திருத்திக்கொள்வதுடன், சக ஓட்டுனர்களின் தவறுகளையும் திருத்த முயற்சிக்கிறோம்” என்றதுடன், வெளிநாட்டு பயணிகள் மட்டுமின்றி, வெளியூர் பயணிகளுக்கும் இனி நல்ல உபசரிப்பு உண்டு என்றார்.
நிகழ்ச்சியில் நிறைய ஆட்டோ ஓட்டுனர்கள் குழுமியிருந்தாலும், அதில் புருஷோத்தமன் என்பவர் மட்டும் தனியாக தெரிந்தார். ஏனெனில் அவரது கைகளை விருது அலங்கரித்துக்கொண்டிருந்தது. அதுபற்றி முழுமையாக தெரிந்து கொள்ள அவரிடம் பேசினோம்.
“நான் முன்னாள் ஆட்டோ ஓட்டுனர். பண்பாட்டு தூதுவர்கள் நிகழ்ச்சியில் தவறாமல் கலந்துகொள்வேன். இந்த நிகழ்ச்சியில் கற்றுக்கொடுக்கப்பட்ட ஆங்கிலமும், நல்ல பண்புகளும் என்னை சிறந்த ஆட்டோ ஓட்டுனராக மாற்றியது. குறிப்பாக ஆங்கிலம் கற்றுக்கொண்ட தால் வெளிநாட்டு பயணிகளுக்காக ஆட்டோ ஓட்ட ஆரம்பித்தேன். என்னுடைய பழக்க வழக்கம் வெளிநாட்டு பயணிகளுக்கு பிடித்து போனதால்... தமிழகத்திற்கு வரும்போதெல்லாம் அவர்கள் என்னுடைய ஆட்டோக்களில் பயணித்தனர். கடினமாக உழைத்ததால், சொந்தமாக 2 கார்கள் வாங்கியிருக்கிறேன். எனது உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரமாக தமிழ்நாடு சுற்றுலா துறையின் மூலம் சிறந்த ஓட்டுனர்களுக்கு வழங்கப்படும் ‘டூரிஸ்ட் பிரெண்ட்லி டிரைவர்’ என்ற விருது பெற்றிருக்கிறேன். ஒரு சாதாரண ஆட்டோ ஓட்டுனரை பண்பாட்டு தூதுவர்கள் நிகழ்ச்சி எந்தளவிற்கு உயர்த்தும் என்பதற்கு நான் முன் உதாரணமாகிறேன். இதுபோன்ற நிகழ்ச்சிகள் தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும் நடத்தப்படவேண்டும். கல்வி நிறுவனங்களும், தனியார் அமைப்புகளும் என்னை போன்ற ஆட்டோ ஓட்டுனர்களை நல்ல முறையில் ஊக்கப்படுத்தினால், ஏராளமான பண்பாட்டு தூதுவர்களை உருவாக்கலாம்” என்று பொறுப்போடு பேசி முடித்தார்.
இன்று நம்முடைய போக்குவரத்திற்கு பல சேவைகள் வந்தாலும், ஆட்டோ சவாரி என்பது தனி சுகம்தான். ‘பிரசவத்திற்கு இலவசம்’ என்பதை எழுதி மனிதநேயத்தை வளர்த்தது ஆட்டோதான். சாலையில் விபத்து ஏற்பட்டால் முதல் வண்டியாய் பறந்து வருவதும் ஆட்டோதான். தவறவிட்ட பொருட்களை பத்திரமாக உரியவரிடத்தில் சேர்ப்பதும் ஆட்டோதான். இத் தகைய ஆட்டோக்களுக்கு நம்முடைய ஆதரவும் அவசியம். பல ஏ.சி. வாகனங்கள் வந்துவிட்டாலும், ஜிலு...ஜிலு... காற்றோடு ஆட்டோவில் பயணிப்பதை மறந்துவிட முடியுமா...?

Related Tags :
Next Story