மரக்கடை உரிமையாளர் வி‌ஷம் குடித்து தற்கொலை காரணம் என்ன? போலீஸ் விசாரணை


மரக்கடை உரிமையாளர் வி‌ஷம் குடித்து தற்கொலை காரணம் என்ன? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 1 April 2018 4:45 AM IST (Updated: 1 April 2018 12:19 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் மரக்கடை உரிமையாளர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். அதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் டென்னிசன் ரோட்டை சேர்ந்தவர் ஜாண்மவுன்ட் பேட்டன் பிரபு (வயது 37). ஒழுகினசேரியில் மரக்கடை நடத்தி வந்தார். இவருக்கு வளர்மதி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். பிரபுவுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

இதை மனைவி கண்டித்ததால் இருவருக்கும் இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் வளர்மதி தன் மகள்களை அழைத்துக் கொண்டு புதுக்குடியிருப்பில் உள்ள தாயார் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இந்த நிலையில் பிரபு நேற்று காலையில் அவரது மரக்கடையில் பிணமாக கிடந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக கோட்டார் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சுபாஷ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

பின்னர் பிரபுவின் உடலை பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் வி‌ஷம் குடித்து பிரபு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. ஆனால் அவர் தற்கொலைக்கான காரணம் பற்றிய விவரம் தெரியவில்லை. குடும்ப பிரச்சினை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Next Story