கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் நீர்வரத்து ஓடை, குளத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் நீர்வரத்து ஓடை, குளத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
கோவில்பட்டி,
கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் நீர்வரத்து ஓடை, குளத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
நீர்வரத்து ஓடை
கோவில்பட்டி அருகே அப்பனேரியில் இருந்து அய்யனேரி கண்மாய்க்கு செல்லும் ஓடை தூர்ந்து விட்டது. அதனை சிலர் ஆக்கிரமித்து மானாவாரி விவசாயம் செய்தனர். இதையடுத்து நீர்வரத்து ஓடையில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நேற்று மாலையில் நடந்தது. பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
தாசில்தார் ஜான்சன் தேவசகாயம், மண்டல துணை தாசில்தார் நாகராஜன், வருவாய் ஆய்வாளர் முனியாண்டி மற்றும் பலர் உடன் இருந்தனர். இதேபோன்று கோவில்பட்டி நாற்கர சாலையோரம் தூர்ந்து போன ஓடையை தூர்வாரும் பணி விரைவில் நடைபெறும் என்று தாசில்தார் ஜான்சன் தேவசகாயம் தெரிவித்தார்.
ஸ்ரீவைகுண்டம்
இதேபோன்று ஸ்ரீவைகுண்டம் அருகே மூலக்கரை குத்தாளங்குறிச்சி குளத்தில் சிலர் ஆக்கிரமித்து சுமார் 3½ ஏக்கர் பரப்பளவில் வாழை பயிரிட்டு இருந்தனர். அதனை அகற்றும் பணி நேற்று நடந்தது. பொக்லைன் எந்திரம் மூலம் வாழை மரங்களை அகற்றினர். தாசில்தார் தாமஸ் பயஸ் அருள், வருவாய் ஆய்வாளர் பாண்டியராஜன், கிராம நிர்வாக அலுவலர் ரத்தினராஜ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
நீர்வரத்து கால்வாய்கள், குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை ஆக்கிரமிப்பாளர்களே அகற்ற வேண்டும். இல்லையெனில் வருவாய்துறை மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதுடன், ஆக்கிரமிப்பாளர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தாசில்தார் தாமஸ் பயஸ் அருள் தெரிவித்தார்.

Related Tags :
Next Story