காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து டிராபிக் ராமசாமி திடீர் உண்ணாவிரதம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து ஸ்ரீரங்கத்தில் டிராபிக் ராமசாமி உண்ணாவிரதம் இருந்தார்.
ஸ்ரீரங்கம்,
மக்கள் பாதுகாப்பு கழக நிறுவன தலைவர் டிராபிக் ராமசாமியின் 85-வது பிறந்த நாள் விழா உள்ளிட்ட முப்பெரும் விழா ஸ்ரீரங்கத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி அவர் நேற்று அதிகாலை சென்னையில் இருந்து ஸ்ரீரங்கம் வந்தார். இதனையடுத்து ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்துக்கு சென்ற டிராபிக் ராமசாமி தனது காரை நிறுத்தி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், இதை அமைக்க மத்திய அரசை வலியுறுத்தாத தமிழக அரசை கலைக்க வலியுறுத்தியும் திடீரென்று உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டார். தனது காரை நிறுத்தி அதன் அருகில் அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கிய டிராபிக் ராமசாமி, பின்னர் தனது காரின் முன்புறம் ஏறி படுத்துக்கொண்டு போராட்டத்தை தொடர்ந்தார். எந்தவித அறிவிப்பும் இன்றி திடீரென அவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் பொதுமக்கள் திரண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
போலீஸ் பாதுகாப்பு
இதுகுறித்து தகவலறிந்த ஸ்ரீரங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் அவர் மாலையில் உண்ணாவிரத போராட்டத்தை முடித்து கொண்டார்.

Related Tags :
Next Story