3-ந் தேதி நடக்கும் மறியல் போராட்டத்தில் அனைத்து கட்சியினரும் பங்கேற்க வேண்டும் அய்யாக்கண்ணு அழைப்பு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி வருகிற 3-ந் தேதி நடக்கும் மறியல் போராட்டத்தில் அனைத்து கட்சியினரும் பங்கேற்க வேண்டும் என்று அய்யாக்கண்ணு, பி.ஆர்.பாண்டியன் ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர்,
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு, தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் ஆகியோர் தஞ்சையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.
அய்யாக்கண்ணு நிருபர் களிடம் கூறியதாவது:-
வாழ்வா? சாவா? என்ற நிலையில் விவசாயிகள் உள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மேலும் 3 மாத காலம் மத்திய அரசு காலஅவகாசம் கேட்பது விவசாயிகளை ஏமாற்றுவதற்காகத்தான். இது கொலை செய்வதற்கு சமம். குறுவை சாகுபடிக்கு ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும். ஆனால் 3 மாதம் அவகாசம் கேட்பதால் இந்த ஆண்டும் தண்ணீர் வருவது கேள்விக்குறி தான். தண்ணீர் வரவில்லை என்றால் காவிரி டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகும்.
மீத்தேன் திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம் போன்ற திட்டங்களை செயல்படுத்தி ரூ.10 லட்சம் கோடி சம்பாதித்து கார்ப்பரேட் நிறுவனங்கள் அள்ளி செல்ல முடியும். எனவே அவர்களுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. விவசாயிகளை அடிமைகளாகத்தான் பார்க்கிறார்கள். விவசாயிகளை அழிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி நினைக்கிறார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை கூட செயல்படுத்த மோடி மறுக்கிறார்.
கோர்ட்டு உத்தரவை மதிக்காமல் தொடர்ந்து செயல்பட்டு வரும் கர்நாடக அரசை அரசியலமைப்பு சட்டப்பிரிவு 356-ஐ பயன்படுத்தி கலைக்க வேண்டும். கர்நாடகத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக எங்களை மத்திய அரசு ஒதுக்கி வைக்க வேண்டாம்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வருகிற 3-ந் தேதி தமிழகம் முழுவதும் சாலை மறியல், ரெயில் மறியல், விமான நிலையங்கள் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. ஒவ்வொருவரும் தனித்தனியாக போராட்டத்தை அறிவித்து போராட்டத்தை பிசுபிசுக்க வைக்க வேண்டாம்.
தமிழகத்தில் 3-ந் தேதி 21 லட்சம் கடைகளை வணிகர்கள் அடைக்க இருக்கிறார்கள். ஆளும்கட்சி, எதிர்க்கட்சி தலைவர்களும் ஒரே நாளில் போராட்டம் நடத்தி தமிழகம் ஸ்தம்பித்தது என்ற நிலையை உருவாக்க வேண்டும். விவசாயிகளை காப்பாற்றுங்கள். நாங்கள் யாரிடம் சென்று அழுவது என்று தெரியவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை தொடர் போராட்டம் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது:-
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான கெடு முடிவடைந்தவுடன் அனைத்துக்கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்டியிருந்தால் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்திருக்க முடியும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகத்தில் மாணவர்கள், விவசாயிகள், பல்வேறு கட்சியினர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி 3-ந் தேதி ரெயில் மறியல், சாலை மறியல், மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகை, விமான நிலையங்கள் முற்றுகை போராட்டம் நடைபெறுகிறது.
திருச்சியில் விமான நிலையத்தை முற்றுகையிட்டு விமானங்களை தரையிறக்க விடமாட்டோம். இந்த போராட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., ம.தி.மு.க., தே.மு.தி.க., நாம் தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, த.மா.கா., அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என அனைத்து கட்சியினரும் பங்கேற்க வேண்டும். தமிழக அரசு பஸ்களை இயக்கக்கூடாது. ரெயில்கள், விமானங்கள் போக்குவரத்தையும் ரத்து செய்ய வேண்டும். அரசு அலுவலகங்கள், பள்ளிக்கூடங்கள் செயல்படக்கூடாது.
தமிழகமே ஸ்தம்பித்தது என்ற நிலையை உருவாக்க வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். தஞ்சையில் நடைபெறும் ரெயில் மறியல் போராட்டத்தில் நான் பங்கேற்கிறேன். திருச்சி விமான நிலையத்தை முற்றுகையிடும் போராட்டத்திற்கு அய்யாக்கண்ணு தலைமை தாங்குகிறார். திருவாரூரில் நடைபெறும் போராட்டத்தில் மன்னார்குடி ரெங்கநாதன் பங்கேற்கிறார். நாகையில் நடக்கும் போராட்டத்தில் முன்னோடி விவசாயிகள் பங்கேற்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக அனைத்து விவசாய சங்கங்களின் ஆலோசனை கூட்டம் தஞ்சையில் நடந்தது. கூட்டத்திற்கு காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க திருச்சி மாவட்ட தலைவர் பாலு தீட்சிதர் தலைமை தாங்கினார். இதில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு, தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், காவிரி டெல்டா விவசாயிகள் நல உரிமை சங்க தலைவர் மன்னார்குடி ரெங்கநாதன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் நிர்வாகிகள் அண்ணாதுரை, திருப்பதி வாண்டையார், பாஸ்கரன், மணி, விசுவநாதன், ரமேஷ், ராமநாதன், மதியழகன், தங்கமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story