கைத்தறி கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேடு: மறுதேர்தல் அறிவிக்கக்கோரி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


கைத்தறி கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேடு: மறுதேர்தல் அறிவிக்கக்கோரி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 1 April 2018 4:30 AM IST (Updated: 1 April 2018 1:08 AM IST)
t-max-icont-min-icon

கைத்தறி கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேட்டை கண்டித்தும், மறுதேர்தல் அறிவிக்கக்கோரியும் கைத்தறி கூட்டுறவுச் சங்கங்களில் அலுவலகம் முன்பு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் பகுதியில் உள்ள கைத்தறி கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்ற கூட்டுறவு சங்கத்தேர்தலில் முறைகேடுகள் நடந்து வருவதாகவும், மேலும் இத்தேர்தலில் உரிய ஆவணங்கள் செலுத்தியும் மனுக்கள் பரிசீலனை செய்யப்படாமல் நிராகரிக்கப்பட்டது. இதனை கண்டித்து முறைகேட்டில் ஈடுபட்ட இலையூர் கைத்தறி கூட்டுறவு சங்க அலுவலகம் முன்பு தி.மு.க.வினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவசங்கர் தலைமை தாங்கினார். மாநில இளைஞரணி இணைச்செயலாளர் சுபா.சந்திரசேகர், ஜெயங்கொண்டம் நகர செயலாளர் கருணாநிதி, ஆண்டிமடம் ஒன்றியகழக செயலாளர் தருமதுரை ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு, முறைகேட்டில் ஈடுபட்டவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்த அதிகாரிகளின் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மற்றும் தமிழக அரசிற்கு எதிராக கண்டன கோஷங்களையும் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் உறுப்பினர்கள், பொதுமக்கள் மற்றும் தி.மு.க.வினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் செங்குந்தபுரம் கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்ற கூட்டுறவு சங்கத்தேர்தலில் முறைகேடுகள் நடந்து வருவதாகவும், மேலும் இத்தேர்தலில் உரிய ஆவணங்கள் செலுத்தியும் மனுக்கள் பரிசீலனை செய்யப்படாமல் நிராகரிக்கப்பட்டது. இதனை கண்டித்து முறைகேட்டில் ஈடுபட்ட செங்குந்தபுரம் கைத்தறி கூட்டுறவு சங்கத்தின் முன்பு தி.மு.க.வினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Next Story