திருச்செந்தூர் அருகே, நிலக்கரி கையாளும் தளம்: ஆய்வுக்காக வந்த படகை மீனவர்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு
திருச்செந்தூர்-குலசேகரன்பட்டணம் கிழக்கு கடற்கரை சாலையில் கல்லாமொழி அருகே புதிதாக அனல் மின்நிலையம் அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
திருச்செந்தூர்,
திருச்செந்தூர்-குலசேகரன்பட்டணம் கிழக்கு கடற்கரை சாலையில் கல்லாமொழி அருகே புதிதாக அனல் மின்நிலையம் அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த திட்டத்துக்காக கல்லாமொழி கடல் பகுதியில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் நிலக்கரி கையாளும் தளம் அமைப்பதற்கான ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து அதிகாரிகள் விசைப்படகுகளில் வந்து அவ்வப்போது ஆய்வு பணிகளில் ஈடுபட்டு வந்தனர். இதற்கு கல்லாமொழி, ஆலந்தலை பகுதி மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர். இதையடுத்து கடந்த 25-ந்தேதி திருச்செந்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் மீனவர்களுடன் சமாதான கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் மீனவ மக்களிடம் மீண்டும் கலந்தாய்வு கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. அதுவரை ஆய்வு பணிகள் நடத்தக்கூடாது என மீனவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், கல்லாமொழி கடல் பகுதியில் ஆய்வுக்காக விசைப்படகு நிறுத்தப்பட்டு இருந்தது. அதில் படகு டிரைவர் மற்றும் இரு காவலாளிகள் மட்டும் இருந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி தகவல் அறிந்ததும், நேற்று காலை ஆலந்தலை மீனவர்கள் கல்லாமொழி கடல் பகுதிக்கு சென்று விசைப்படகை சிறைபிடித்து ஆலந்தலை கடல் பகுதிக்கு கொண்டு வந்தனர்.
பின்னர் அதிலிருந்த டிரைவர் மற்றும் காவலாளிகளை மீனவர்கள் விடுவித்தனர். அவர்களை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் அழைத்து சென்றனர். சிறைபிடிக்கப்பட்ட விசைப்படகு ஆலந்தலை பகுதியில் 200 மீட்டர் தொலைவில் கடலில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டு உள்ளது. இதுகுறித்து ஆலந்தலை கடலோர பாதுகாப்பு குழும போலீசார், மீன்வளத்துறை அதிகாரிகளுக்கும், உடன்குடி அனல்மின்நிலைய திட்ட அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்து உள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Tags :
Next Story