தாகத்தை தணிப்பதற்காக குடிநீர் தேடி அலையும் பொதுமக்கள்
முக்கிய இடங்களில் தண்ணீர் வசதியில்லாததால் திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தண்ணீரை தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே முக்கிய இடங்களில் தண்ணீர் பந்தல் திறக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. அதன் காரணமாகவோ என்னவோ ஆண்டின் பெரும்பாலான மாதங்கள் இங்கு வெயிலின் கொடுமை அதிகரித்தே காணப்படும். மதிய நேரங்களில் மக்கள் வெளியே தலைகாட்ட முடியாத அளவுக்கு வெயிலின் கொடுமை உள்ளது. வெயிலில் இருந்து தப்பிக்க சிலர் கையில் குடையுடன் நடந்து செல்கின்றனர். சிலர் தலையில் துணியை போட்டு நடந்து செல்கின்றனர்.
வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் சிலர் பழச்சாறு, கரும்பு சாறு, ஐஸ் கிரீம் கடைகளில் தஞ்சம் அடைந்து அவற்றை வாங்கி அருந்துகின்றனர். சாலைகளில் திடீர் திடீர் என தர்பூசணி கடைகள் முளைத்து வியாபாரம் களைகட்டி வருகிறது. வெயிலில் அலைந்து திரிந்து வருபவர்கள் தர்பூசணியை சாப்பிட்டு தாகத்தை தணிக்கின்றனர்.
அதே நேரத்தில் முக்கிய இடங்களில் குடிநீர் வசதி எதுவும் செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் தண்ணீரை தேடி கடைகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. சில கடைகளில் தண்ணீர் தானத்தை உணர்ந்து தண்ணீர் கொடுக்கின்றனர். ஆனால் பல கடைகளில் “நாங்களே காசுக்கு தண்ணீர் வாங்குகிறோம்” எனக் கூறி தண்ணீர் கொடுக்க மறுக்கின்றனர். இதனால் வெளியூர் பகுதி பொதுமக்கள் கடைகளில் விற்கப்படும் பாட்டில் குடிநீரை வாங்குகின்றனர். அதற்கு வசதியில்லாதவர்கள் தண்ணீருக்காக பரிதவிக்கின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. இதையடுத்து வெயில் வெளுத்து வாங்க தொடங்கியது. நேற்று முன்தினம் திருவண்ணாமலையில் வெயில் அளவு 100 டிகிரியை எட்டியது. நேற்றும் வெயில் கொளுத்தியது. இப்போதே வெயில் கொளுத்தி வரும் நிலையில் அக்னி நட்சத்திரம் நாட்களில் எப்படி இருக்குமோ என்று மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
பகல் நேரங்களில் வெளியில் செல்லும் மக்களின் நிலையை கருத்தில் கொண்டு அவர்களது தாகத்தை தணிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தண்ணீர் பந்தல் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதனால் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறுவார்கள். எனவே, மாவட்ட நிர்வாகம் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Tags :
Next Story