வேப்பனப்பள்ளி, ஏரியூர் பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி


வேப்பனப்பள்ளி, ஏரியூர் பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 1 April 2018 4:15 AM IST (Updated: 1 April 2018 1:54 AM IST)
t-max-icont-min-icon

வேப்பனப்பள்ளி, ஏரியூர் பகுதிகளில் நேற்று ஆலங்கட்டி மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

வேப்பனப்பள்ளி,

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சுற்று வட்டாரத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் லேசான மழை பெய்து வருகிறது. நேற்று மாலை வானம் மேகமூட்டமானது. சிறிது நேரத்தில் மழை பெய்யத் தொடங்கியது. அப்போது ஆலங்கட்டி மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதே போல கிருஷ்ணகிரி சுற்று வட்டாரத்தில் நேற்று மாலை வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. சிறிது நேரத்தில் பயங்கர இடி-மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது. இரவு 7.30 மணி முதல் 8 மணி வரை மழை பெய்தது. இந்த மழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதே போல சூளகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது. இந்த மழையால் கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஏரியூர்

தர்மபுரி மாவட்டம் ஏரியூரில் நேற்று மாலை திடீரென கருமேகங்கள் சூழ்ந்தன. அப்போது சூறைக்காற்று வீசியது. சிறிது நேரத்தில் ஆலங்கட்டியுடன் மழை பெய்யத் தொடங்கியது. சுமார் அரை மணி நேரம் இந்த மழை நீடித்தது. மழையின்போது விழுந்த ஆலங்கட்டிகளை அந்த பகுதியை சேர்ந்த சிறுவர்கள் கைகளில் எடுத்து ஆச்சரியத்துடன் பார்த்தனர். 

Next Story