நீலகிரியில் ஆலங்கட்டி மழை: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
நீலகிரியில் நேற்று ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோத்தகிரி,
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே குளுகுளு நகரான ஊட்டியில் வாட்டி வதைத்தது. இதற்கு சற்று ஆறுதல் தருவதுபோல் கடந்த வாரம் ஒரு சில நாட்கள் மழை பெய்தது. இருப்பினும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. இந்த நிலையில் நேற்று ஊட்டியில் மாலையில் சாரல் மழை பெய்தது.
குன்னூர் பகுதியில் மாலையில் வானம் மேகமூட்டமாக காட்சி அளித்தது. பின்னர் சிறிது நேரம் ஆலங்கட்டி மழை பெய்தது. அதை தொடர்ந்து மிதமான மழை பெய்தது. கொலக்கம்பை பகுதியிலும் சாரல் மழை பெய்தது. மஞ்சூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்தது. கன்னேரி பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது.
கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை 5 மணி அளவில் இடி மின்னலுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. சுமார் 20 நிமிடம் ஆலங்கட்டி மழை பெய்ததால் சாலைகளில் ஐஸ் கட்டிகள் பரவி கிடந்தன. சாலை முழுவதும் வெண்மை நிறமாக காட்சியளித்தது. கோத்தகிரி நேரு பூங்கா புல்தரை, சாலை ஓரங்களில் ஐஸ் கட்டி கொட்டி கிடந்தது பார்க்க ரம்யமாக காட்சி அளித்தது. இந்த திடீர் மழையால் குளிர்ச்சியான காலநிலை நிலவுகிறது. இதனால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Related Tags :
Next Story