கூட்டுறவுசங்க தேர்தலில் முறைகேடு நடப்பதாககூறி ஒரத்தநாடு பகுதியில் சாலை மறியல்
கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேடு நடப்பதாக கூறி ஒரத்தநாடு பகுதியில் சாலை மறியல் நடைபெற்றது. மேலும் வங்கிகளையும் முற்றுகையிட்டு விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஒரத்தநாடு,
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகாவில் உள்ள பொன்னாப்பூர், நெடுவாக்கோட்டை, வடசேரி, தொண்டராம்பட்டு, கண்ணுகுடி கிழக்கு, கண்ணுகுடி மேற்கு, ராஜாளிவிடுதி ஆகிய ஊர்களில் செயல்பட்டுவரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளுக்கு சில தினங்களுக்கு முன் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று பொன்னாப்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு தேர்தலில் போட்டியிடுவதற்குரிய வேட்புமனுக்களை பெறுவதற்காக விவசாயிகள் சென்றனர். ஆனால் அந்த வங்கி பூட்டப்பட்டு இருந்தது. இதனால் இந்த தேர்தலில் முறைகேடு நடப்பதாக கூறி விவசாயிகள் வங்கிக்கு எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து விவசாயிகள் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜேஷ்கண்ணன் உள்ளிட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதைப்போல கண்ணுகுடிகிழக்கு, கண்ணுகுடிமேற்கு மற்றும் தொண்டராம்பட்டு ஆகிய ஊர்களில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலும் வேட்புமனுக்கள் வழங்கப்படவில்லை என கூறி அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஒரத்தநாடு தெற்கு ஒன்றிய செயலாளர் ஆசைத்தம்பி மற்றும் தி.மு.க.வினர் சம்பந்தப்பட்ட வங்கிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து இவர்கள் பாப்பாநாடு மதுக்கூர் பிரிவு சாலை அருகே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 1 மணிநேரம் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. வடசேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வேட்பு மனுக்கள் வழங்கப்படவில்லை என கூறி முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் நந்தக்குமார் உள்ளிட்ட தி.மு.க. பிரமுகர்களும் வடசேரியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராஜாளிவிடுதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு சென்ற விவசாயிகள் தேர்தலில் போட்டியிடுவதற்குரிய வேட்பு மனுக்களை கேட்டனர். ஆனால் அங்கு பணியிலிருந்த அலுவலர்கள் சம்மந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் இதுவரை வங்கிக்கு வரவில்லை என்று கூறினர். இதனால் வங்கியை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த தேர்தலில் முறைகேடு நடப்பதாக கூறி திருவோணத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.வும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஒன்றிய செயலாளருமான சி.ராஜேந்திரன், தி.மு.க ஊராட்சி செயலாளர் எஸ். கண்ணப்பன் உள்ளிட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. இந்த மறியல் போராட்டங்களில் தி.மு.க காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்பட பல்வேறு கட்சி பிரமுகர்களும் கலந்து கொண்டனர். நெடுவாக்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வேட்பு மனுக்கள் வழங்ககோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சம்மந்தப்பட்ட தேர்தல் அலுவலர் நேரில் வந்து விவசாயிகளுக்கு வேட்பு மனுக்களை வழங்கினார்.
அதிராம்பட்டினம் அருகே உள்ள சேன்டாகோட்டையில் முதல்சேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த கூட்டுறவு சங்கத்துக்கு தேர்தல் நடைபெறவிருந்த நிலையில் நேற்று வேட்பு மனுக்கள் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் நேற்று காலை 10 மணி முதல் வேட்பு மனு அளிக்க பல்வேறு கட்சியினர் வந்திருந்தனர். இந்நிலையில் மதியம் 1 மணி ஆன பிறகும் வேட்பு மனு பெற தேர்தல் அதிகாரி வரவில்லை. இதனால் நீண்ட நேரம் காத்திருந்த பல்வேறு கட்சி பிரமுகர்கள் கூட்டுறவு சங்க அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதைத்தொடர்ந்து முன்னால் எம்.எல்.ஏ. ஏனாதிபாலு மற்றும் அரசியல் கட்சியினர்
பட்டுக்கோட்டை- அதிராம்பட்டினம் மெயின் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அதிராம்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனர்.
இதைப்போல பேராவூரணி - ஆவணம் சாலையில் அம்மையாண்டியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு வேட்புமனு பெற அதிகாரிகள் வராததை கண்டித்து தி.மு.க. மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story