கூட்டுறவு சங்க தேர்தல்: வேட்பு மனு தாக்கலில் அ.தி.மு.க.- அ.ம.மு.க.வினர் இடையே தள்ளுமுள்ளு
ஆண்டிப்பட்டி அருகே கூட்டுறவு சங்க தேர்தல் வேட்பு மனு தாக்கலின் போது, அ.தி.மு.க.-அ.ம. மு.க.வினருக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
ஆண்டிப்பட்டி,
ஆண்டிப்பட்டி அருகே பாலக்கோம்பை கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் உள்ளது. இந்த சங்கத்தில் 11 இயக்குனர் பதவி களுக்கு வேட்பு மனு தாக்கல் நேற்று நடந்தது. இதில் வேட்பு மனு தாக்கல் தொடங்கியுடன் அ.தி.மு.க. வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை தேர்தல் அலுவலர் விஜயராஜிடம் தாக்கல் செய்தனர். அப்போது அ.தி.மு.க. மாவட்ட துணைத்தலைவர் முருக்கோடை ராமர், ஒன்றிய முன்னாள் செயலாளர் லோகிராஜன் ஆகியோர் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் சங்கத்தின் முன்பு கூடியிருந்தனர்.
அப்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஆண்டிப்பட்டி ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் மற்றும் நிர்வாகிகள் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தனர். அங்கு நின்ற அ.தி.மு.க. நிர்வாகிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது.
இதில் அவர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது. உடனே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை கலைத்தனர்.
இதை தொடர்ந்து கூட்டுறவு சங்க அலுவலகத்துக்குள் யாரும் உள்ளே செல்லவிடாமல் அ.தி.மு.க.வினர் படிக் கட்டுகளில் அமர்ந்தனர்.
தகவலறிந்த ஆண்டிப்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு குலாம் தலைமையில் கூடுதல் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் இரு தரப்பினரிடையே போலீஸ் துணை சூப்பிரண்டு பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பின்பு அ.தி.மு.க., அ.ம.மு.க.வினர் மனு தாக்கல் செய்தனர்.

Related Tags :
Next Story