பஸ் மோதி விபத்து: ஆட்டோ டிரைவர் உடல் நசுங்கி சாவு


பஸ் மோதி விபத்து: ஆட்டோ டிரைவர் உடல் நசுங்கி சாவு
x
தினத்தந்தி 1 April 2018 3:15 AM IST (Updated: 1 April 2018 2:21 AM IST)
t-max-icont-min-icon

அரசு பஸ் மோதியதில் ஆட்டோ டிரைவர் உடல் நசுங்கி உயிரிழந்தார்.

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன்(வயது45). சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வந்துள்ளார். நேற்று அருப்புக்கோட்டை பஸ் நிலையத்தின் அருகிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு கோவிலாங்குளம் சென்றார். அங்கு பயணிகளை இறக்கி விட்டு திரும்பிக்கொண்டிருந்தார்.

பாலையம்பட்டியில் ஒரு வளைவில் திரும்பியபோது அருப்புக்கோட்டையில் இருந்து மதுரைக்கு சென்று கொண்டிருந்த அரசு பஸ் மோதியது. இதில் முத்து கிருஷ்ணன் உடல் நசுங்கி அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டு தனபால், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் அங்கு சென்று முத்துகிருஷ்ணன் உடலை மீட்டு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தினால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உயிரிழந்த முத்துகிருஷ்ணனுக்கு மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். 

Next Story