லால்குடியில் 14 கூட்டுறவு வங்கிகள் தேர்தல் வங்கி திறக்கப்படாததை கண்டித்து வேட்பாளர்கள் சாலைமறியல்


லால்குடியில் 14 கூட்டுறவு வங்கிகள் தேர்தல்  வங்கி திறக்கப்படாததை கண்டித்து வேட்பாளர்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 1 April 2018 4:15 AM IST (Updated: 1 April 2018 2:27 AM IST)
t-max-icont-min-icon

லால்குடியில் 14 கூட்டுறவு வங்கிகள் தேர்தல் வங்கி திறக்கப்படாததை கண்டித்து திமுக, டிடிவிஅணி, இதர கட்சி வேட்பாளர்கள் சாலைமறியல்

லால்குடி,

லால்குடியில் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் அறிவித்ததை அடுத்து நேற்று 14 கூட்டுறவு வங்கிகள் திறக்கப்பட்டாததால் திமுக, டிடிவிஅணி, மற்றும் இதர கட்சியினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

திருச்சி மாவட்டம், லால்குடியில் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் அறிவித்ததை அடுத்து நேற்று 14 கூட்டுறவு வங்கிகளுக்கு திமுக. டிடிவி அமமுக, காங்கிரஸ், பாஜக, உள்ளிட்ட கட்சிகள் தேர்தலில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வேட்பாளர்கள் காலை 9 மணிமுதல் லால்குடி எல்.அபிக்ஷேகபுரம், இடையாற்றுமங்கலம், பூவாளூர், நகர், தச்சன்குறிச்சி உள்ளிட்ட 14 கூட்டுறவு வேளாண்மை வங்கிகளில் வேட்பு மனுக்களை வாங்குவதற்காக காத்திருந்தனர். 10 மணி ஆகியும் கூட்டுறவு வங்கிகள் திறக்கப்படாததால் ஆத்திரம் அடைந்து வேட்பாளா£களும் கட்சி தொண்டர்களும் லால்குடியில் பல்வேறு பகுதிகளில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பூவாளூர் கூட்டுறவு வங்கி திறக்கப்படாததை கண்டித்து திருச்சி அரியலூர் சாலை பூவாளுரில் திமுக ஒன்றிய பிரதிநிதி டாக்டர் சிவக்குமார், டிடிவி அணி மாவட்ட அவைத்தலைவர் தர்மதுரை, நகர செயலாளர் சுரேக்ஷ், மற்றும் கட்சியினுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. இதனை தொடர்ந்து நகர் கூட்டுறவு வங்கி திறக்கப்பட்டாததை கண்டித்து ஒன்றிய செயலாளர் தமிழ்ச்செல்வன் சாலைமறியலில் ஈடுபட்டு வேட்பு மனுக்களை ஆட்டு குட்டியிடம் வழங்கினார். மேலும் வாளாடி கூட்டுறவு வங்கி திறக்கப்பட்டாததை கண்டித்து திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் வைரமணி, டிடிவி அணி லால்குடி ஒன்றிய செயலாளர் விஜயமூர்த்தி, மதிமுக ஒன்றிய செயலாளர் சுப்ரமணியன், கம்யூனிஸ்ட் கட்சி விவசாய சங்க மாவட்ட குழு பழனிசாமி, தலைமையில் சாலைமறியலில் ஈடுபட்டதால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. லால்குடி டிஎஸ்பி ரமேக்ஷ்பாபு, இன்ஸ்பெக்டர் தினேக்ஷ்குமார் கட்சியினரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். வேட்பாளர்கள் தேர்தல் அதிகாரி வரும் வரை கலைந்து செல்வதில்லை என பிடிவாதத்தில் இருந்தனர் இதனால் மேலும் வாளாடி பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதிகாரிகள் வராததால் ஆத்திரமடைந்த கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் நாயை அழைத்து வந்து வேட்புமனுவை கொடுத்து கலைந்து சென்றனர். இதேபோல் லால்குடி எல்.அபிக்ஷேகபுரம் கூட்டுறவு வங்கி திறக்கப்பட்டாததை கண்டித்து லால்குடி திமுக நகர செயலாளர் துரைமாணிக்கம் தலைமையில் முன்னாள் கவுன்சிலர் மதி, டிடிவி அணி மாவட்ட பிரதிநிதி நன்னிமங்கலம் சக்திவேல், கன்று குட்டியை அழைத்துவந்து வேட்புமனுவை அளித்தனர். பல்வேறு பகுதிகளில் கூட்டுறவு வங்கிகள் தறக்கப்பட்டாததால் ஆத்திரமடைந்த வேட்பாளர்கள் தாங்களும் பதிலுக்கு பூட்டுகளை வாங்கி வந்து பூட்டி சென்றது குறிப்பிடத்தக்கது.


Next Story