நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு: போராட்ட அமைப்புகளை கண்காணிக்கும் உளவுத்துறை, சமூக வலைதளங்களில் ஆதரவு திரட்டும் இளைஞர்கள்
நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ள நிலையில், முல்லைப்பெரியாறு அணைக்காக களம் இறங்கிய போராட்ட அமைப்புகளை உளவுத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
தேனி,
தேனி மாவட்டம், கடந்த 2011-ம் ஆண்டு மிகப்பெரிய போராட்ட களத்தை பார்த்தது. முல்லைப்பெரியாறு அணையை பாதுகாக்கவும், அணைக்கான தமிழக உரிமைகளை மீட்கவும் பொதுமக்கள் தன்னெழுச்சியாக போராட்ட களத்தில் குதித்தனர். பாலார்பட்டியில் மிகப்பெரிய அளவில் உண்ணாவிரதம், அதைத்தொடர்ந்து கிராமம் கிராமமாக மக்கள் திரண்டு வந்து கேரள எல்லையை முற்றுகையிடும் போராட்டம் என மாவட்டம் முழுவதும் போராட்ட களமாக மாறியது.
இந்த தன்னெழுச்சிப் போராட்டம் இந்திய அளவில் பேசப்பட்டது. இந்த போராட்ட களத்தில் பல்வேறு போராட்ட அமைப்புகளும் உருவாகின. அதன் தொடர்ச்சியாக முல்லைப் பெரியாறு அணையின் உரிமையை மீட்க பல்வேறு அமைப்புகள் போராட்ட களத்தில் ஈடுபட்டன.
இந்த நிலையில், போடி அருகே பொட்டிப்புரம் அம்பரப்பர் மலைப்பகுதியில் நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கு மத்திய சுற்றுச்சூழல் ஆணையம் அனுமதி அளித்துள்ள நிலையில், இந்த திட்டத்துக்கு தேனி மாவட்டத்தில் விவசாயிகள், இளைஞர்கள், சுற்றுச்சூழல் ஆய்வாளர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
முல்லைப்பெரியாறு அணைக்காக நடந்த போராட்டம் போல், நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராகவும் வலுவான போராட்டங்களில் ஈடுபட வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறைக்கு பல்வேறு தகவல்கள் கிடைக்க பெற்றுள்ளன. இதனால், முல்லைப்பெரியாறு அணைக்கான போராட்ட களத்தில் ஈடுபட்ட போராட்ட அமைப்புகளின் நடவடிக்கைகளை உளவுத்துறை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
அதேநேரத்தில் வாட்ஸ்-அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களிலும் நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கருத்துகள் பதிவிடப்பட்டு உள்ளன. தங்களின் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் பல்வேறு ‘மீம்ஸ்’களும் உருவாக்கி, சமூக வலைதளங்களில் சிலர் பரப்பி வருகின்றனர். ஜல்லிக்கட்டுக்காக போராடிய இளைஞர்கள், மாணவர்கள் குழுவினரும் வாட்ஸ்-அப் மூலம் போராட்டத்தில் ஈடுபட ஆதரவு திரட்டி, அதற்கு ஆயத்தமாகி வருவதாகவும் உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களையும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story