கார் மோதி படுகாயமடைந்த பெண் டாக்டர் சிகிச்சை பலனின்றி சாவு
கார் மோதி படுகாயமடைந்த பெண் பல் டாக்டர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
மும்பை,

பல் டாக்டர்
அகமதுநகரை சேர்ந்தவர் பல் டாக்டர் தீபாலி. இவர் மும்பை நாயர் பல் மருத்துவக்கல்லூரியில் பணியாற்றி வந்தார். கடந்த சனிக்கிழமை தீபாலி சகோதரரின் மருத்துவ கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் கலந்து கொள்ள அவர் மும்பை மெரின் டிரைவ் பகுதிக்கு சென்றார்.
அப்போது அங்குள்ள சாலையை கடந்து செல்ல முயன்றபோது அந்த வழியாக வந்த கார் தீபாலி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
ஆசிரியை கைது
பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக ஜே.ஜே. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட் டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் அவர் சிகிச்சை பலன்இன்றி உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தீபாலி மீது காரை மோதியவர் நேப்பியன் சீ ரோடு பகுதியை சேர்ந்த ஆசிரியை ஜிகா ஜாவேரி என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

Related Tags :
Next Story