அந்தியூர் கூட்டுறவு சங்கத்தில் ரூ.8½ லட்சத்துக்கு வாழைப்பழம் ஏலம்


அந்தியூர் கூட்டுறவு சங்கத்தில் ரூ.8½ லட்சத்துக்கு வாழைப்பழம் ஏலம்
x
தினத்தந்தி 1 April 2018 3:50 AM IST (Updated: 1 April 2018 3:50 AM IST)
t-max-icont-min-icon

வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று வாழைப்பழம் ஏலம் நடந்தது.

அந்தியூர், 

அந்தியூர் புதுப்பாளையத்தில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று வாழைப்பழம் ஏலம் நடந்தது. இந்த ஏலத்துக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் 4 ஆயிரத்து 986 வாழைப்பழத்தார்களை கொண்டு வந்திருந்தனர். இதில் கதலி (கிலோ) 14 ரூபாய் 40 காசுக்கும், நேந்திரம் 31 ரூபாய்க்கும் ஏலம் போனது. இதேபோல் பூவன் (தார்) ரூ.715-க்கும், ரஸ்தாளி ரூ.795-க்கும், செவ்வாழை ரூ.960-க்கும், தேன்வாழை ரூ.890-க்கும், மொந்தன் ரூ.465-க்கும், பச்சைநாடான் ரூ.505-க்கும், ரொபஸ்டா ரூ.485-க்கும் விற்பனை ஆனது. வாழைப்பழம் மொத்தம் ரூ.8 லட்சத்து 55 ஆயிரத்துக்கு ஏலம் போனது. 

Next Story