குடிநீர் பிடிப்பதில் தகராறு பெண்ணை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள்தண்டனை தகானு கோர்ட்டு தீர்ப்பு
குடிநீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தகானு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
மும்பை,

குடிநீர் பிடிப்பதில் தகராறு
பால்கர் மாவட்டம் தகானு தாலுகா காசா கிராமத்தை சேர்ந்தவர் தேவன் (வயது34). கடந்த 2012-ம் ஆண்டு கிராமத்தில் உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்க மாலதி (55) என்ற பெண் வரிசையில் நின்று கொண்டிருந்தார். அங்கு தண்ணீர் பிடிக்க தேவனும் வந்தார். அவர் வரிசையில் நிற்காமல் தண்ணீர் பிடிக்க முயன்றார். இதனால் மாலதிக்கும், வாலிபருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த தேவன் தான் வைத்திருந்த கத்தியால் மாலதியின் கழுத்தை அறுத்து உள்ளார். இதில் படுகாயமடைந்த மாலதியை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாலதி பலியானார்.
கைது
இது குறித்து காசா போலீசார் வழக்கு பதிவு செய்து தேவனை கைது செய்தனர். இந்த வழக்கு மீதான விசாரணை தகானு கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணையின் போது 30 பேரிடம் சாட்சியம் பெறப்பட்டது. இதில் தேவன் மீதான குற்றச்சாட்டு ஆதாரங்களுடன் நிரூபணமானது.
இதையடுத்து இந்த வழக்கில் தேவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

Related Tags :
Next Story