திருப்பூர் மாநகர், மாவட்டத்துக்கு ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் நியமனம்
திருப்பூர் மாநகர், மாவட்டத்துக்கு ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பூர்,
ரஜினி மக்கள் மன்றத்துக்கு மாவட்டம் வாரிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். அதன்படி திருப்பூர் மாநகர செயலாளராக ரவிக்குமார், இணைச்செயலாளர்களாக சதீஷ்குமார், ரமேஷ், துணை செயலாளர்களாக தங்கவேல், குணசேகரன், செயற்குழு உறுப்பினர்களாக சோமசுந்தரம், கார்த்திகேயன், குமார், சீனிவாசன், முத்துக்குமார், நாசர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுபோல் திருப்பூர் மாவட்ட செயலாளராக மேகநாதன், இணைச்செயலாளர்களாக சந்திரமோகன், கணேசன், துணை செயலாளர்களாக ராம்குட்டி, ராஜ்குமார், மனோகர், குணசேகரன், வர்த்தக அணி செயலாளராக ஸ்ரீகாந்த், இணை செயலாளராக செந்தில்குமார், செயற்குழு உறுப்பினர்களாக குணசேகரன், பூபதி, சிவலிங்கசாமி, ஆனந்தகுமார், சிவகுமார், வக்கீல் அணி செயலாளராக சதாசிவம், விவசாய அணி செயலாளராக ஆண்டிப்பாளையம் மூர்த்தி, மருத்துவ அணி செயலாளராக ஹரி வீர விஜயகாந்த், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளராக சிவகுமார், இணை செயலாளராக ஜவகர், இளைஞர் அணி செயலாளராக பிரபு, இணை செயலாளராக அருண் கார்த்தி, மகளிர் அணி செயலாளராக சுகந்தி, இணை செயலாளராக ஆசிப்பியா பர்வீன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story