அம்மாபாளையம் அருகே கத்திமுனையில் வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது


அம்மாபாளையம் அருகே கத்திமுனையில் வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது
x
தினத்தந்தி 1 April 2018 3:50 AM IST (Updated: 1 April 2018 3:50 AM IST)
t-max-icont-min-icon

கத்தி முனையில் வழிப்பறி செய்தவரை பொதுமக்கள்பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்தனர்.

அனுப்பர்பாளையம், 

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே ராக்கியாபாளையம் காந்திஜி வீதி பகுதியை சேர்ந்தவர் முருகையன் மகன் கார்த்திகேயன் (வயது 32). பனியன் நிறுவன தொழிலாளி. இவர் நேற்று அதிகாலை தனது மோட்டார் சைக்கிளில் அம்மாபாளையம் வந்தார். அங்கிருந்து திருப்பூர் செல்வதற்காக தண்ணீர்பந்தல் பஸ் ஸ்டாப்பின் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு வாலிபர் திடீரென இவரது மோட்டார்சைக்கிளை வழிமறித்து தடுத்து நிறுத்தினார்.

பின்னர் கொலை மிரட்டல் விடுத்து , கத்தியை காட்டி மிரட்டி, கார்த்திகேயனின் கையில் அணிந்திருந்த கைக்கெடிகாரம், மற்றும் ரூ.2 ஆயிரத்தையும் வழிப்பறி செய்து தப்பிச்செல்லும்போது, பொதுமக்கள் துரத்திச்சென்று அவரை பிடித்து வேலம்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர்.

கைது

போலீசார் விசாரணையில் அந்த வாலிபர் கோவை டவுன்ஹால் அருகே ஐந்து முக்கு பகுதியை சேர்ந்த இஸ்மாயில் மகன் ஸ்நேக்பாபு என்ற இசாக்(35) என்பது தெரியவந்தது. மேலும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் இவர் தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததும், இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழிப்பறி தொடர்பான வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.

இது தொடர்பாக வேலம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து ஸ்நேக்பாபுவை கைது செய்தார். 

Next Story