தாம்பரம் சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் தீ விபத்து உடனே அணைக்கப்பட்டதால் பெரும்சேதம் தவிர்ப்பு


தாம்பரம் சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் தீ விபத்து உடனே அணைக்கப்பட்டதால் பெரும்சேதம் தவிர்ப்பு
x
தினத்தந்தி 1 April 2018 4:00 AM IST (Updated: 1 April 2018 4:05 AM IST)
t-max-icont-min-icon

தாம்பரத்தில் உள்ள சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தாம்பரம்,

சென்னை கிழக்கு தாம்பரத்தில் சென்னை கிறிஸ்தவ கல்லூரி உள்ளது. 365 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த கல்லூரி வளாகத்தில் 70 சதவீதத்திற்கு மேல் மரங்கள் சூழ்ந்து காணப்படும். இங்கு சுமார் 5 ஆயிரத்துக் கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். வெளிமாநிலத்தை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் இங்குள்ள விடுதிகளில் தங்கி படித்து வருகின்றனர்.

இந்த கல்லூரி வளாகத்தின் ஒரு பகுதி கிழக்கு தாம்பரம், ஐ.ஏ.எப் சாலையில் உள்ளது. இந்த சாலையில் கல்லூரியின் மதில்சுவற்றின் ஓரம் கடந்த சில நாட்களாக மரக்கழிவுகள் கொட்டப்பட்டு இருந்தது.

திடீர் தீவிபத்து

நேற்று மதியம் அந்த மரக்கழிவுகளில் திடீரென தீப்பிடித்தது. அப்போது காற்று பலமாக வீசியதால் தீ மளமளவென பரவி கல்லூரி வளாகத்தில் உள்ள சில மரங்களில் பரவியது. உடனே அந்த மரங் கள் தீப்பிடித்து எரியத்தொடங் கின. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் தாம்பரம் விமான படை தளத்தில் இருந்தும், தாம்பரம் தீயணைப்பு நிலையத்தில் இருந்தும் 2 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முயன்றனர். 1½ மணிநேர போராட்டத்திற்கு பின்னர் தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.

தீ உடனே அணைக்கப்பட்டதால் பெரும்சேதம் தவிர்க்கப்பட்டது. கல்லூரி கட்டிடம், விடுதிகளுக்குள் தீ பரவி இருந்தால் பொருள் சேதம், உயிர்சேதம் ஏற்பட்டு இருக்கும். 

Next Story