கோயம்பேடு மார்க்கெட்டில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்


கோயம்பேடு மார்க்கெட்டில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
x
தினத்தந்தி 1 April 2018 4:15 AM IST (Updated: 1 April 2018 4:05 AM IST)
t-max-icont-min-icon

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளை அகற்றப்பட்டது.

கோயம்பேடு,

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பழம் மற்றும் காய்கறி மார்க்கெட்டுகளில் ஆக்கிரமிப்பு கடைகளால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு மிக இடையூறு இருப்பதாக அங்காடி முதன்மை நிர்வாக அலுவலர் ராஜேந்திரனுக்கு புகார் வந்தது.

இதையடுத்து பழம் மற்றும் காய்கறி மார்க்கெட்டுக்கு சென்ற ராஜேந்திரன் தலைமையிலான ஊழியர்கள் போக்குவரத்துக்கு இடையூறாக ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த 25 கடைகளை அகற்றினர்.

மேலும் அந்த கடைகளில் இருந்து ரசாயனம் மூலம் பழுக்க வைத்த பழங்கள், வண்ணம் சேர்க்கப்பட்ட காய்கறிகளை பறிமுதல் செய்தனர். அந்த வகையில் சுமார் 10 டன் அளவுக்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

விதிமுறைகளை மீறி வியாபாரம் செய்த வியாபாரிகளை எச்சரித்த அவர்கள், ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதித்தனர். இதனால் மார்க்கெட் வளாகத்திற்குள் வாகன போக்குவரத்து சீரானதுடன், பொதுமக்கள் இடையூறின்றி பொருட்களை வாங்கி சென்றனர். 

Next Story