அ.தி.மு.க. உண்ணாவிரத போராட்ட அறிவிப்பு மக்களை ஏமாற்றும் வேலை
காவிரி மேலாண்மை வாரியம் பிரச்சினைக்காக அ.தி.மு.க.வின் உண்ணாவிரத போராட்ட அறிவிப்பு மக்களை ஏமாற்றும் வேலை என முன்னாள் அமைச்சர் பழனியப்பன் கூறினார்.
சேலம்,
சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான நடராஜன் உடல் நலக்குறைவால் கடந்த 20-ந் தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரது மனைவி சசிகலா பரோலில் தஞ்சைக்கு வந்து அனைத்து சடங்கு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார்.
இதற்கிடையே பரோல் முடிவடைந்த நிலையில் சசிகலா நேற்று காலை தஞ்சையில் இருந்து பெங்களூரு சிறைக்கு காரில் புறப்பட்டார்.
பெங்களூரு செல்லும் வழியில் நேற்று மதியம் 12.30 மணிக்கு சேலம் கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகில் சசிகலாவின் கார் வந்தது. அங்கு டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்களான எஸ்.கே.செல்வம், வெங்கடாசலம் ஆகியோர் தலைமையில் திரளானவர்கள் கூடி வரவேற்று கோஷம் எழுப்பினார்கள். சிலர், ஆர்வத்தால் சசிகலாவின் கார் கண்ணாடியை தட்டினர். சசிகலா, காரின் உள்ளே இருந்தபடியே அவர்களுக்கு வணக்கம் தெரிவித்தார்.
காரில் சசிகலாவுடன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அமைப்பின் தலைவரான டி.டி.வி.தினகரன், இவரது ஆதரவாளரான தங்கதமிழ்ச்செல்வன் ஆகியோரும் இருந்தனர். மேலும் முன்னாள் அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, பழனியப்பன் ஆகியோர் சென்றனர். அப்போது முன்னாள் அமைச்சர் பழனியப்பன் நிருபர்களிடம் கூறியதாவது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதே வேளையில் தமிழகத்தில் ஆளும் கட்சியினரும் எவ்வித அழுத்தமும் கொடுக்கவில்லை. இப்படி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து விட்டு, தற்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான ‘கெடு‘ முடிந்த பிறகு உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அ.தி.மு.க. அறிவித்து இருப்பது மக்களை ஏமாற்றும் வேலையாகும். இது தமிழக மக்களுக்கு நன்கு தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story