முட்டாள்கள் தினம் உருவான விதம்...
இன்று (ஏப்ரல் 1-ந்தேதி) முட்டாள்கள் தினம்.
எதை மறந்தாலும் மறப்போம் இந்த தேதியை மட்டும் நம்மில் பலரும் மறப்பதில்லை. இந்த தினத்துக்கு முந்தைய சில நாட்களில் இருந்தே உஷாராக இருக்க தொடங்கி விடுவோம். நாம் யாரையாவது ஏமாற்ற வேண்டும் என்பதை விட, நம்மை யாரும் ஏமாற்றிவிடக்கூடாது என்பதில் தான் அத்தனை உஷார். வயது வித்தியாசம் இன்றி மற்றவர்களை ஏமாற்றியும், மற்றவர்களால் ஏமாற்றப்பட்டும் முட்டாள்கள் தினத்தை ஒரு கொண்டாட்டமாகவே நாம் பார்க்கிறோம். இந்த முட்டாள்கள் தினம் எப்படி வந்தது? என்ற கேள்வி நம்மில் பலருக்கும் எழலாம்.
கிட்டத்தட்ட 16-ம் நூற்றாண்டு வரை ஐரோப்பா கண்டத்தில் உள்ள பல நாடுகளில் ஏப்ரல் 1-ந்தேதி ஆண்டின் தொடக்க நாளாக கருதப்பட்டது. இப்போது ஜனவரி மாதம் கொண்டாடப்படும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் அத்தனையும், அந்த நாடுகளில் ஏப்ரல் 1-ந்தேதியில் கடைபிடிக்கப்பட்டன. காரணம், அப்போதைய ஜூலியன் காலண்டரில் ஏப்ரல் 1-ந்தேதி தான் புத்தாண்டு தினமாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
பிறகு, 13-ம் கிரகரி என்ற போப் ஆண்டவர் ஜனவரி 1-ந்தேதியை புத்தாண்டு தினமாக கொண்டு கிரகோரியன் ஆண்டு கணிப்பு முறையை கொண்டுவந்தார். அதை பல நாட்டினரும் ஏற்க மறுத்தனர். ஆனால், ஜனவரி 1-ந்தேதியை புத்தாண்டாக ஏற்றுக்கொண்டவர்கள், அதை ஏற்க மறுத்தவர்களை முட்டாள்களாக கருதினர். ஒவ்வொரு ஏப்ரல் 1-ந்தேதியும் அவர்களுக்கு வெற்று பரிசுப்பெட்டியை அனுப்பி வைத்து அவர்களை ஏமாற்றினர்.
ஒரு கட்டத்தில் உலகம் முழுவதும் ஜனவரி 1-ந்தேதியை புத்தாண்டாக பின்பற்ற தொடங்கிய பிறகும் கூட முட்டாள்கள் தினம் மறையவில்லை. மாறாக, ஒருவரையொருவர் ஏமாற்றும் தினமாக அது உருவெடுத்துவிட்டது. இன்றைய இணைய உலகில் மற்றவர்களை முட்டாள்கள் ஆக்கும் எண்ணம் இன்னும் மேலோங்கி இருக்கிறது. முட்டாள்கள் தினம் தோன்றியதற்கு வேறு காரணங்கள் இருப்பதாகவும் சொல்லப்படுவதுண்டு.
அதே போல, ‘மேலை நாட்டில் தோன்றிய முட்டாள்கள் தினம் நமக்கு தேவைதானா? இதை கொண்டாடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும்?’ என வருந்துபவர்களும் பலர் இருக்கிறார்கள்.

Related Tags :
Next Story