கொடைரோடு சுங்கச்சாவடியை தமிழக வாழ்வுரிமை கட்சியினர் முற்றுகை 156 பேர் கைது


கொடைரோடு சுங்கச்சாவடியை தமிழக வாழ்வுரிமை கட்சியினர் முற்றுகை 156 பேர் கைது
x
தினத்தந்தி 2 April 2018 12:49 AM IST (Updated: 2 April 2018 12:49 AM IST)
t-max-icont-min-icon

சுங்கவரி உயர்வை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

கொடைரோடு,

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு சுங்கச்சாவடி மையத்தில், சுங்கவரி உயர்வை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தினர். இதற்கு திண்டுக்கல் மத்திய மாவட்ட செயலாளர் பெரியசாமி தலைமை தாங்கினார்.

கிழக்கு மாவட்ட செயலாளர் ரூபன்சுந்தர், மேற்கு மாவட்ட செயலாளர் ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் அந்தோணி, சாணார்பட்டி ஒன்றிய செயலாளர் மகேஷ்வரன், வடமதுரை ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் மற்றும் குஜிலியம்பாறை ஒன்றிய செயலாளர் பொன்னுச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், சுங்கவரி கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என கோ‌ஷங்களை எழுப்பினர். இதையடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியினர் 156 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.


Next Story