சுங்கச்சாவடியை தமிழக வாழ்வுரிமை கட்சியினர் முற்றுகை பெண்கள் உள்பட 25 பேர் கைது


சுங்கச்சாவடியை தமிழக வாழ்வுரிமை கட்சியினர் முற்றுகை பெண்கள் உள்பட 25 பேர் கைது
x
தினத்தந்தி 2 April 2018 4:00 AM IST (Updated: 2 April 2018 1:04 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணராயபுரம் அருகே சுங்கச்சாவடியை முற்றுகையிட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த பெண்கள் உள்பட 25 பேரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணராயபுரம்,

சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்து சுங்கச்சவாடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என தமிழக வாழ்வுரிமை கட்சியினர் அறிவித்திருந்தனர். அதன்படி கரூர் மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள மணவாசியில் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தின் போது சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

25 பேர் கைது

இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த மாயனூர் போலீசார், தமிழக வாழ்வுரிமை கட்சியினரை கைது செய்தனர். இதில் 15 பெண்கள் உள்பட 25 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் அனைவரும் அருகில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.


Next Story