காவிரி பிரச்சினைக்காக போராட்டம்: கோவை வ.உ.சி. மைதானத்துக்கு ‘சீல்’
காவிரி பிரச்சினைக்காக போராட்டம் நடத்தப்படலாம் என்று கிடைத்த தகவலை தொடர்ந்து கோவை வ.உ.சி. மைதானத்துக்கு போலீசார் சீல் வைத்தனர். முக்கிய இடங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டங்கள் வலுத்து வருகிறது. ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் திரண்டு எழுச்சியாக நடத்திய போராட்டங்களை போல காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும் மாநில முழுவதும் போராட்டங்கள் நடைபெறலாம் என உளவுத்துறை போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.
இதைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டு போராட்டங்கள் நடைபெற்ற இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
கோவையில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்ற கோவை வ.உ.சி. மைதானத்துக்கு போலீசார் நேற்று முன்தினம் முதல் ‘சீல்’ வைத்தனர். மைதானத்தை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அதற்குள் யாரும் நுழைய முடியாத வகையில் நாலாபுறமும் பலத்த பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர். மைதானத்தின் நுழைவு பகுதியில் இரும்புத்தடுப்புகள் வைக்கப்பட்டு இரவு, பகலாக போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
இதேபோல் கொடிசியா மைதானம், ரேஸ்கோர்ஸ் நடைபாதை உள்ளிட்ட நகரின் முக்கிய இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தொடர்ந்து அரசியல் கட்சிகள், பொது நல இயக்கங்கள் சார்பில் தொடர் போராட்டங்கள் நடைபெறும் வாய்ப்பு உள்ளதாக கிடைத்த தகவலை தொடர்ந்து மாநகரின் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தொடர் போராட்டங்கள் நடத்த அழைப்பு விடுத்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு அமைப்பினரும் தகவல்களை பகிர்ந்து வருகின்றனர். அவற்றையும் போலீசார் தீவிரமாக கண்காணிக்கின்றனர்.

Related Tags :
Next Story