காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து மாணவர்கள் போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தஞ்சை அருகே மாணவர்கள் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பச்சை துண்டால் கழுத்தில் சுருக்கு மாட்டியபடி கோஷங்கள் எழுப்பினர்.
தஞ்சாவூர்,
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு 6 வாரங்கள் கெடு அளித்தது. ஆனால் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல், மேலும் 3 மாதம் அவகாசம் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளது.
இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள், விவசாயிகள், மாணவர்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தஞ்சையை அடுத்த வல்லம் பஸ் நிலையம் அருகே தமிழ்நாடு மாணவர் இயக்கம் சார்பில் மாணவர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். மாநில ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களில் சிலர் பச்சை துண்டால் கழுத்தில் சுருக்குமாட்டியபடி மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களில் சிலர் சாலையில் படுத்தும் கோஷங்கள் எழுப்பினர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் வல்லம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை சமாதானம் செய்தனர். அதன் பின்னர் மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றார். மாணவர்களின் இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story