காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தி.மு.க.வினர் சாலைமறியல்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தி.மு.க.வினர் சாலைமறியல்
x
தினத்தந்தி 2 April 2018 4:15 AM IST (Updated: 2 April 2018 1:49 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திருத்துறைப்பூண்டியில் தி.மு.க.வினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருத்துறைப்பூண்டி,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையம் அருகில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு திருத்துறைப்பூண்டி ஆடலரசன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. விஜயன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

இதில் தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அனைவரும் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மடப்புரம்

இதேபோல மடப்புரம் பஸ் நிறுத்தம் அருகில் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றத்தின் சார்பில் 10-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் திருத்துறைப்பூண்டி-மன்னார்குடி சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கோட்டூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் மாரிமுத்து தலைமை தாங்கினார். இதுபற்றி தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் திருத்துறைப்பூண்டி-மன்னார்குடி சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வடுவூர்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வடுவூரில் பொதுமக்கள், இளைஞர் குழுவினர், வடுவூர் வளர்ச்சி குழு மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் நேற்று வடுவூர் பஸ் நிறுத்தம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

Next Story