மணல் லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. மணல் லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பூந்தமல்லி,
மத்திய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் ஒப்பந்தபடி நேற்று முதல் தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அதன் தலைவர் யுவராஜ் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் போரூர் சுங்கச்சாவடி அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது.
இந்த சுங்கச்சாவடியை நிர்வகிக்கும் தனியார் நிறுவனங்கள் சாலையை பராமரிப்பது இல்லை. பயணிகளுக்கு கழிவறை, மின்விளக்கு வசதிகளை செய்து கொடுப்பது இல்லை. இந்த பகுதியில் ஆம்புலன்ஸ் மற்றும் விபத்தில் சிக்கும் வாகனங்களை இழுத்துச்செல்லும் வாகனங்கள் இருக்க வேண்டும். ஆனால் அந்த வாகனங்கள் இல்லை. இந்த கட்டண உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும். எனவே தமிழக அரசு ஆய்வு செய்து ஒப்பந்தபடி காலக்கெடு முடிவடைந்த சுங்கச்சாவடிகளை மூடிவிட்டு, மக்கள் இலவசமாக பயணிக்கும் சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை மதுரவாயல் போலீசார் சமாதானம் செய்து கலைந்து போக செய்தனர்.

Related Tags :
Next Story