காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து தொப்பூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டம் நடத்தினர். இதில் 6 பெண்கள் உள்பட 80 பேர் கைது செய்யப்படடனர்.
தர்மபுரி,
தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கும் காவிரியின் உரிமையை நிலைநாட்டிடவும், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான அனைத்து சுங்கச்சாவடிகள் முன்பும் முற்றுகை போராட்டம் நடந்தது. அதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் தொப்பூர் சுங்கச்சாவடி முன்பு நேற்று போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்திற்கு தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் தவமணி தலைமை தாங்கினார். தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் முனிரத்தினம், கிழக்கு மாவட்ட செயலாளர் மாது, மாநில மகளிர் அணி செயலாளர் ஜெயலட்சுமி பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
முற்றுகை
இந்த போராட்டத்தின் போது சுங்கச்சாவடிகளில் சாலை வரி என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் தொப்பூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினர். மேலும் சுங்கச்சாவடி வழியாக செல்லும் வாகன டிரைவர்களிடம் வரிகொடுக்காமல் செல்லுங்கள் என்றும் கோஷங்கள் எழுப்பினர். அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த போராட்டத்தில் மாநில அமைப்புகுழு உறுப்பினர் பாபு, மாவட்ட மகளிர் அணி செயலாளர்கள் மணிலா, மதுபாலா, மீனா, நிர்வாகிகள் பன்னீர் செல்வம், ரமேஷ், சீனிவாசன், நவீன் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். போலீசாரின் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட 6 பெண்கள் உள்பட 80 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் மாலை விடுவிக்கப்பட்டனர்.

Related Tags :
Next Story