திருப்பூரில் உண்ணாவிரத போராட்டத்தில் திரளானவர்கள் பங்கேற்க வேண்டும் அ.தி.மு.க. ஆலோசனைக்கூட்டத்தில் முடிவு


திருப்பூரில் உண்ணாவிரத போராட்டத்தில் திரளானவர்கள் பங்கேற்க வேண்டும் அ.தி.மு.க. ஆலோசனைக்கூட்டத்தில் முடிவு
x
தினத்தந்தி 3 April 2018 3:45 AM IST (Updated: 2 April 2018 11:36 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கும் உண்ணாவிரத போராட்டத்தில் திரளானவர்கள் பங்கேற்க வேண்டும் என்று அ.தி.மு.க. ஆலோசனைக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

திருப்பூர், 

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை ஏற்று காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவும், காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவை உடனடியாக அமைக்கக்கோரியும், காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டக்கோரியும் மத்திய அரசை வலியுறுத்தி திருப்பூர் மாநகர், புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் இன்று(செவ்வாய்க்கிழமை) திருப்பூர் ரெயில் நிலையம் முன்பு நடக்கிறது.

இந்த உண்ணாவிரத போராட்டம் குறித்த ஆலோசனைக்கூட்டம் நேற்று திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், காவிரி நீர் பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டும் வகையில் அ.தி.மு.க. அரசு போராடி வருகிறது.

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தி நடக்கும் உண்ணாவிரத போராட்டத்தில் திரளானவர்கள் பங்கேற்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

இந்த கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் கரைப்புதூர் நடராஜன்(பல்லடம்), விஜயகுமார்(திருப்பூர் வடக்கு), முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் சண்முகம், நிர்வாகிகள் ஜான், ராதாகிருஷ்ணன், பழனிச்சாமி, சிவாசலம், சேவூர் வேலுச்சாமி மற்றும் ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story