துப்புரவு பணியாளர்களுக்கு ஒளிரும் ஆடை: கலெக்டர் லதா வழங்கினார்


துப்புரவு பணியாளர்களுக்கு ஒளிரும் ஆடை: கலெக்டர் லதா வழங்கினார்
x
தினத்தந்தி 3 April 2018 3:00 AM IST (Updated: 3 April 2018 1:11 AM IST)
t-max-icont-min-icon

கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் சிவகங்கை நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு ஒளிரும் ஆடைகளை கலெக்டர் லதா வழங்கினார்.

சிவகங்கை,

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் லதா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, விபத்து நிவாரணம் கோருதல், பசுமை வீடு கேட்டல், சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் உதவித் தொகை கோருதல், வங்கிக்கடன், மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் கேட்டல், குடும்ப அட்டை கோருதல், இலவச தையல் எந்திரம் வழங்க கேட்டல், ஆக்கிரமிப்பு அகற்ற கேட்டல், பட்டா வழங்க கேட்டல், மின் இணைப்பு தொடர்பாக மனுக்கள், பயிர் காப்பீடு வழங்க கேட்டல் மனுக்கள் மற்றும் இதர மனுக்கள் என 225 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இதனையடுத்து பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணப்பட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரம் குறித்து பயனாளிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

இதனைத்தொடர்ந்து சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் 1 பயனாளிக்கு மாத விதவை ஓய்வூதிய தொகைக்கான ஆணையும், செஞ்சிலுவை அமைப்பின் சார்பில் சிவகங்கை நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு ஒளிரும் ஆடைகளையும் கலெக்டர் வழங்கினார். இந்த கூட்டத்தில் வருவாய் அலுவலர் இளங்கோ, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காஞ்சனா, சப்-கலெக்டர் ஆஷா அஜீத், சிவகங்கை கோட்டாட்சியர் ராமபிரதீபன் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

Next Story