கூட்டுறவு சங்கங்களுக்கு முதல்கட்ட தேர்தல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது
குமரி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களுக்கு முதல்கட்ட தேர்தல் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவு சங்கங்களுக்கு 4 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகின்றன. முதல்கட்டமாக 24 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், 15 பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கங்கள், 2 கூட்டுறவு பண்டகசாலை, 15 பால்வள கூட்டுறவு சங்கங்கள், 28 மீன்வள கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கைத்தறி கூட்டுறவு சங்கங்கள் உள்பட மொத்தம் 114 சங்கங்களுக்கு ஏப்ரல் 2-ந் தேதி (அதாவது நேற்று) தேர்தல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி முதல்கட்ட தேர்தல் மாவட்டம் முழுவதும் நேற்று நடந்தது. இதில் சில சங்கங்களுக்கு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து மீதமுள்ள சங்கங்களுக்கான தேர்தல் அந்தந்த கூட்டுறவு சங்க அலுவலகங்களில் நேற்று நடந்தது. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. சங்கங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டு போட்டனர்.
வாக்குப்பதிவையொட்டி அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
குமரி மாவட்டத்தில் முதல்கட்ட தேர்தல் நடைபெறும் சங்கங்களில் வேட்பாளர் பட்டியல் மற்றும் உறுப்பினர் பட்டியல் வெளியிடுவதில் முறைகேடு நடந்ததாகவும், எனவே தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்றும் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், கூட்டுறவு இணை பதிவாளரும், கூட்டுறவு சங்க தேர்தல் அதிகாரியுமான நடுக்காட்டு ராஜாவை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்கள். அதைத் தொடர்ந்து நாகர்கோவில் சரகத்தில் 2 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தக்கலையில் 7 சங்கங்கள் என மொத்தம் 9 சங்கங்களில் தேர்தலை ரத்து செய்யக்கோரி மாநில தேர்தல் அதிகாரிக்கு குமரி மாவட்ட தேர்தல் அதிகாரி நடுக்காட்டு ராஜா பரிந்துரை கடிதம் அனுப்பினார்.
ஆனால் பரிந்துரை கடிதம் அனுப்பிய பிறகும் மாநில தேர்தல் அதிகாரியிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தேர்தலை ரத்து செய்யக்கோரி பரிந்துரை செய்யப்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கும் நேற்று தேர்தல் நடந்தது. இந்த 9 கூட்டுறவு சங்கங்களுக்கும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று (செவ்வாய்க் கிழமை) காலை 10 மணிக்கு தொடங்குகிறது. தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலுக்கான கூட்ட அறிவிப்பு நாள் இன்று அறிவிக்கப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து 7-ந் தேதி தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் நடக்கிறது. குமரி மாவட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு 2-ம் கட்ட தேர்தல் வருகிற 7-ந் தேதி நடக்க இருக்கிறது. மொத்தம் 115 சங்கங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 31-ந் தேதி நடந்தது.

Related Tags :
Next Story