கூட்டுறவு சங்க தேர்தலில் மோதல்: வாக்குச்சீட்டு கிழிப்பு–தர்ணா போராட்டம்
கூட்டுறவு சங்க தேர்தலில் மோதல் ஏற்பட்டு வாக்குச்சீட்டு கிழிக்கப்பட்டது. சாலை மறியல், தர்ணா போராட்டம் நடந்தது.
ஆண்டிப்பட்டி,
ஆண்டிப்பட்டி அருகே ஜி.ராமலிங்கபுரம் கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் வங்கியில், 11 இயக்குனர்கள் பதவிக்கு அ.தி.மு.க., அ.ம.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 23 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது.
பல உறுப்பினர்களுக்கு எவ்வாறு ஓட்டளிப்பது என்பது தெரியாததால், தேர்தல் அலுவலரே நேரடியாக யாருக்கு வாக்கு அளிக்கிறீர்கள் என்று கேட்டு, சம்மந்தப்பட்ட வேட்பாளரை வாக்குப்பதிவு செய்ய அனுமதித்தனர். இதனால் அ.தி.மு.க., அ.ம.மு.க.வினர் இடையே வாக்குவாதமும் கூச்சல் குழப்பமும் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் மோதல் ஏற்பட்டு சட்டம்–ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் சூழல் நிலவியது.
இதைத்தொடர்ந்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பழனிக்குமார், ஆண்டிப்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு குலாம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசாருக்கும், அ.தி.மு.க.வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் தேர்தலை ரத்து செய்யக்கோரி வேளாண்மை கூட்டுறவு கடன் வங்கி முன்பு அ.தி.மு.க.வினர் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும் அங்கு அசம்பாவிதம் ஏதேனும் ஏற்படாமல் தடுக்க 200–க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
இதேபோல் பெரியகுளம் மீனவர்கள் கூட்டுறவு சங்கத்துக்கு இயக்குனர் தேர்தல் நேற்று காலை தொடங்கியது. இந்த தேர்தல் பெரியகுளம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. 7 இயக்குனர்கள் பதவிக்காக நடைபெற்ற இந்த தேர்தலில் 14 பேர் போட்டியிட்டனர். தேர்தல் அலுவலர் பஞ்சராஜா முன்னிலையில் தேர்தல் நடந்தது.
தேர்தல் தொடங்கியதும் 20–க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் வாக்கு பதிவு நடைபெறும் மையத்துக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்த வாக்கு சீட்டு, வாக்காளர் பட்டியல் ஆகியவற்றை கிழித்தெறிந்தனர். மேலும் ஓட்டு பெட்டியையும் தள்ளி விட்டனர். இதனை அறிந்த அ.ம.மு.க.வினர் வாக்குப்பதிவு செய்யும் மையத்துக்கு சென்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்கள் புதிய பஸ் நிலைய பிரிவில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைய செய்தனர்.
தேனி அல்லிநகரத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் போட்டியிட அ.தி.மு.க.வினர் 11 பேரும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் 13 பேரும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இதில் அ.ம.மு.க.வினரின் வேட்பு மனுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. அ.தி.மு.க.வை சேர்ந்த 11 பேரின் மனுக்கள் மட்டும் ஏற்கப்பட்டதாக அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டது.
இதனால், அ.ம.மு.க. தேனி நகர செயலாளர் காசிமாயன் தலைமையில் அக்கட்சியினர் அங்கு வந்தனர். மனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை நுழைவு வாயிலிலேயே போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், அ.ம.மு.க.வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் தடுப்பை மீறி, கூட்டுறவு சங்கத்தை அவர்கள் முற்றுகையிட்டனர். அப்போது அங்கு இருந்த தேர்தல் நடத்தும் அதிகாரி செல்லமுத்து மற்றும் தற்காலிக பணியாளர்கள் 2 பேரை சிறை பிடித்தனர்.
வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை சொல்ல வேண்டும் என்று அங்கேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே தேர்தல் அதிகாரி அந்த அலுவலகத்தின் பின்வாசல் வழியாக வெளியேறிவிட்டார். தொடர்ந்து அதிகாரிகள் நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், நிராகரிக்கப்பட மனுக்களை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்றும் கோரிக்கை வைத்து போராட்டத்தை தொடர்ந்தனர்.
பிற்பகல் 3.30 மணியளவில் தொடங்கிய இந்த போராட்டம் இரவு 7 மணி வரை நடந்தது. அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தைக்கு வராததால் இரவு 7 மணியளவில் அவர்கள் அனைவரும் அங்கிருந்து புறப்பட்டு புகார் மனு அளிப்பதற்காக கலெக்டர் அலுவலகம் சென்றனர். அப்போது முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை கண்டித்து கோஷங்கள் எழுப்பியபடி சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே போடி, பெரியகுளம் ஆகிய மீனவர் கூட்டுறவு சங்கங்களிலும், கண்டமனூர் அருகே ராமலிங்கபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும் சட்டம்–ஒழுங்கு பிரச்சினையை கருதி மறுதேதி குறிப்பிடாமல் தேர்தல் ஒத்தி வைப்பதாக சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல், வைகை அணை மீனவர் கூட்டுறவு சங்கத்தில் தேர்தல் நடக்க இருந்த நிலையில், அப்பகுதியில் கோவில் திருவிழா மற்றும் சட்டம்–ஒழுங்கு பிரச்சினை கருதி தேர்தலை ஒத்திவைப்பதாக அதிகாரிகள் அறிவித்தனர். இதனால் நேற்று 9 இடங்களில் மட்டுமே வாக்குப்பதிவு நடந்தது.

Related Tags :
Next Story