திண்டுக்கல்லில் பட்டப்பகலில் துணிகரம்: ராணுவ வீரர் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
திண்டுக்கல்லில், பட்டப்பகலில் ராணுவ வீரர் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் பர்மா காலனியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது 35). இவர் ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி சிந்துபைரவி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். குழந்தைகள் இருவரும் திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர்.
தமிழ்ச்செல்வன் ஜம்முகாஷ்மீரில் வேலை செய்வதால், சிந்துபைரவி பர்மா காலனி வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். அருகில் உள்ள மற்றொரு தெருவில் தமிழ்ச்செல்வனின் பெற்றோர் தண்டபாணி, கனகரத்தினம் ஆகியோர் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று காலையில் குழந்தைகள் இருவரும் பள்ளிக்கு சென்றுவிட்டனர். வீட்டில் சிந்துபைரவி மட்டும் தனியாக இருந்துள்ளார். பின்னர் அவர் குழந்தைகளுக்கு தைக்க கொடுத்திருந்த பள்ளி சீருடையை வாங்குவதற்காக தையல் கடைக்கு செல்ல முடிவு செய்தார். இதனால் காலை 9.30 மணி அளவில் வீட்டை பூட்டி, சாவியை அருகில் உள்ள தன்னுடைய மாமியார் வீட்டில் கொடுத்துவிட்டு கடைக்கு சென்றுவிட்டார்.
இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சுற்றுச்சுவரை ஏறி குதித்து, கதவின் பூட்டை இரும்பு கம்பி மூலம் நெம்பி உடைத்து வீட்டுக்குள் சென்றுள்ளனர். பின்னர் வீட்டில் நகை, பணம் ஏதும் உள்ளதா? என்று தேடி உள்ளனர். அப்போது பீரோ அருகிலேயே சாவியை வைத்திருப்பது தெரியவந்தது.
இதனால் கொள்ளையர்கள் சிரமமின்றி சாவி மூலமே பீரோவை திறந்து உள்ளே இருந்த நகையை கொள்ளையடித்துவிட்டு தப்பி சென்றுவிட்டனர். சிறிது நேரம் கழித்து சிந்துபைரவி வீட்டுக்கு வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் உள்ள துணிமணிகள் சிதறி கிடந்தன. மேலும் அதில் இருந்த சுமார் 15 பவுன் நகைகள் மற்றும் ஏ.டி.எம். கார்டு ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து திண்டுக்கல் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தகவல் அறிந்த போலீஸ் துணை சூப்பிரண்டு சிகாமணியும் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர்.
அவர்கள் அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து சிந்துபைரவி அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தால் அந்த பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

Related Tags :
Next Story