கேரளாவில் முழு அடைப்பு: தமிழக அரசு பஸ்கள் களியக்காவிளையில் நிறுத்தம்


கேரளாவில் முழு அடைப்பு: தமிழக அரசு பஸ்கள் களியக்காவிளையில் நிறுத்தம்
x
தினத்தந்தி 3 April 2018 4:30 AM IST (Updated: 3 April 2018 3:01 AM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இதையொட்டி தமிழக அரசு பஸ்கள் எல்லைப்பகுதியான களியக்காவிளையில் நிறுத்தப்பட்டன.

களியக்காவிளை,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய தொழிலாளர் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்த சட்டத்தை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும், கேரளாவில் தொழிற்சங்கங்கள் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன. அதன்படி, நேற்று கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இதனால் அரசு, தனியார் பஸ்கள் இயங்கவில்லை. கடைகள், வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டன.

குமரி-கேரள எல்லையான களியக்காவிளைக்கு தினமும் ஏராளமான கேரள பஸ்கள் வந்து செல்லும். நேற்று முழு அடைப்பு போராட்டத்தையொட்டி கேரள அரசு பஸ்கள் எதுவும் களியக்காவிளைக்கு வரவில்லை. இதனால், பஸ் நிலையத்தில் கேரள பஸ்கள் வந்து நிற்கும் இடம் வெறிச்சோடி காணப்பட்டது.

நாகர்கோவிலில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு தினமும் ஏராளமான தமிழக அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் நேற்று மாவட்டத்தின் எல்லையான களியக்காவிளையில் நிறுத்தப்பட்டன.

இதேபோல், களியக்காவிளையில் இருந்து கேரள பகுதியான பாறசாலை வழியாக பனச்சமூடு, கொல்லங்கோடு போன்ற தமிழக பகுதிகளுக்கு இயங்கும் தமிழக அரசு பஸ்கள் மாற்றுப்பாதையில் இயங்கின. இதனால், கேரளாவுக்கு செல்ல வேண்டிய பயணிகள் கடும் அவதியடைந்தனர். 

Next Story