நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் 2 பெண்கள் உள்பட 28 பேர் கைது
கூடுவாஞ்சேரி அருகே எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து 2 பெண்கள் உள்பட 28 பேரை போலீசார் கைது செய்தனர்.
வண்டலூர்,
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து காஞ்சீபுரம் தென் மண்டல நாம் தமிழர் கட்சியின் சார்பில் நேற்று மாலை 5 மணி அளவில் ஊரப்பாக்கம் ரெயில் நிலையம் அருகே ரெயிலை மறித்து அந்த கட்சியினர் போராட்டம் நடத்தப்போவதாக ரெயில்வே போலீசார் மற்றும் தமிழக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து நேற்று மாலை வண்டலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வளவன் தலைமையில் தமிழக போலீசார் 50 பேரும், 10-க்கும் மேற்பட்ட ரெயில்வே போலீசாரும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஊரப்பாக்கம் ரெயில் நிலையத்தில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதனை அறிந்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட தொண்டர்கள், செங்கல்பட்டு ரெயில் நிலையத்துக்கு சென்று, மன்னார்குடியில் இருந்து சென்னை வழியாக ராஜஸ்தான் மாநிலத்துக்கு செல்லும் ‘பகத் கி கோதி’ எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறி வந்தனர்.
கூடுவாஞ்சேரி ரெயில் நிலையத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரத்தை ரெயில் கடந்து சென்றதும், ஏற்கனவே அந்த ரெயிலில் பயணம் செய்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் ரெயில் பெட்டியில் உள்ள அவசர பாதுகாப்பு சங்கிலியை பிடித்து இழுத்தனர். இதனால் கூடுவாஞ்சேரி-ஊரப்பாக்கம் இடையே நடுவழியில் ரெயில் நின்றது.
எக்ஸ்பிரஸ் ரெயில் நடுவழியில் நிற்பதை பார்த்தவுடன் கூடுவாஞ்சேரி ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் நின்றுகொண்டிருந்த நாம் தமிழர் கட்சியின் காஞ்சீபுரம் தென் மண்டல செயலாளர் சஞ்சிவிநாதன், மாவட்ட செயலாளர் சிவசுப்பரமணியம், மாவட்ட தலைவர் திருகுமார், செங்கல்பட்டு தொகுதி செயலாளர் ஞானமூர்த்தி ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் ரெயில் என்ஜின் மீது ஏறி நின்றும், ரெயில் முன்பு தண்டவாளத்தில் அமர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாம் தமிழர் கட்சியினர் ரெயிலை மறித்து போராட்டம் நடத்துவதை அறிந்த தமிழக போலீஸ் மற்றும் ரெயில்வே போலீசார் ஊரப்பாக்கம் ரெயில் நிலையத்தில் இருந்து தண்டவாளம் வழியாக சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு நடந்து சென்றனர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் வண்டலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வளவன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
அப்போது அவர், உங்கள் போராட்டத்தின் காரணமாக தென் மாவட்டங்களில் இருந்து வரும் பயணிகளும், வேலை முடிந்து மின்சார ரெயிலில் செல்லும் பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர். எனவே போராட்டத்தை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதன் பிறகு ரெயில் மறியலில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் மறியலை கைவிட்டனர்.
இதையடுத்து ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக 2 பெண்கள் உள்பட 28 பேரை ரெயில்வே போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்
நாம் தமிழர் கட்சியினரின் இந்த போராட்டம் காரணமாக நேற்று மாலை 6.30 மணியில் இருந்து இரவு 7 மணி வரை தென் மாவட்டத்தில் இருந்து வந்த அனைத்து ரெயில்களும், செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி செல்லும் அனைத்து மின்சார ரெயில்களும் அரை மணி நேரம் காலதாமதமாக சென்றன.
இதனால் செங்கல்பட்டு-தாம்பரம் மார்க்கத்தில் அரை மணி நேரம் முற்றிலும் ரெயில் சேவை பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக ரெயில் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.

Related Tags :
Next Story