உழைக்கும் பெண்கள் சங்க 40-வது ஆண்டுவிழா தொடங்கியது
உழைக்கும் பெண்கள் சங்கம், இந்திய பெண்கள் கூட்டுறவு இணைப்பு மையம் ஆகியவற்றின் 40-வது ஆண்டுவிழா சென்னையில் நேற்று தொடங்கியது.
சென்னை,
சென்னை மயிலாப்பூரில் உள்ள உழைக்கும் பெண்கள் சங்கம் மற்றும் இந்திய பெண்கள் கூட்டுறவு இணைப்பு மையத்தின் 40-வது ஆண்டுவிழா நேற்று நடைபெற்றது. விழாவில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த உழைக்கும் பெண்கள் மற்றும் மகளிர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். விழாவில் ஜப்பான் நாட்டு பிரமுகர்களும் பங்கேற்றனர்.
உழைக்கும் பெண்கள் சங்க தலைவர் ஜெயா அருணாசலம், இந்திய மகளிர் கூட்டுறவு இணைப்பு மைய தலைவர் நந்தினி ஆசாத் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினார்கள்.
விழாவில் இந்திய மகளிர் கூட்டுறவு இணைப்பு மைய தலைவர் நந்தினி ஆசாத் பேசும்போது, “இந்தியாவில் மட்டுமல்ல தெற்காசியாவில் அமைதி, வறுமை குறைப்பு, மேம்பாடு ஆகியவற்றுக்காக இந்த இந்திய மகளிர் கூட்டுறவு இணைப்பு மையம் செயல்படுகிறது. கூட்டுறவு இல்லாமல் பெண்கள் சாதிப்பது கடினம்” என்றார்.
விழாவில் உழைக்கும் பெண்கள் சங்க தலைவர் ஜெயா அருணாசலம், ஜப்பான் நுகர்வோர் கூட்டுறவு யூனியன் துணைத்தலைவர் சிட்டோஸ் அராய், ஜப்பான் நுகர்வோர் யூனியன் சர்வதேசதுறை மேலாளர் ஹருயோசி அமனோ, முதுநிலை அதிகாரி கனகோ மியாஸவா மற்றும் யோஷிகளு கொய்கி ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.
விழாவையொட்டி அலுவலக வளாகத்தில் பெண்கள் தயாரித்த சேலைகள், காதணிகள் உள்பட பல பொருட்கள் கண்காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன. கலைநிகழ்ச்சிகளும் நடந்தன. முன்னதாக உழைக்கும் பெண்கள் சங்க தலைவர் ஜெயா அருணாசலம் கூறியதாவது.
பல வருடங்களுக்கு முன்பு ஏழை பெண்கள் கல்வி அறிவு இல்லாமல் இருந்தனர். அவர்களுக்கு யாரும் கடன் கொடுக்க முன்வரவில்லை. அதன் காரணமாக உழைக்கும் பெண்கள் சங்கம் சென்னை மயிலாப்பூரில் நிறுவப்பட்டது. அந்த சங்கம் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் வேரூன்றியது. அதன் காரணமாக நிறைய பெண்கள் கடன் பெற்று தொழில் செய்தனர். இதுவரை 20 லட்சம் பேருக்கு கடன் கொடுத்து உள்ளோம்.
இப்போது அந்த பெண்கள் நல்லநிலையில் உள்ளனர். உழைக்கும் பெண்கள் சங்கம், இந்திய மகளிர் கூட்டுறவு இணைப்பு மையம் ஆகியவற்றின் 40-வது ஆண்டுவிழாவுக்கு ஜப்பானில் இருந்து நுகர்வோர் கூட்டுறவு யூனியனை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் வந்துள்ளனர். அவர்கள் இங்குள்ள பெண்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை நேரில் காண்பதற்காகவும், கலாசார பரிவர்த்தனை மேற்கொள்ளவும் வந்திருக்கிறார்கள். இவ்வாறு ஜெயா அருணாசலம் கூறினார். விழா இன்று (புதன்கிழமை) காஞ்சீபுரத்தில் நடைபெறுகிறது.

Related Tags :
Next Story