காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தி.மு.க.வினர் சாலை மறியல்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தி.மு.க.வினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 4 April 2018 3:45 AM IST (Updated: 4 April 2018 1:13 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை, 

திருவண்ணாமலை பஸ் நிலையம் ரவுண்டானா அருகில் முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான எ.வ.வேலு தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

இதில் எம்.எல்.ஏ.க்கள் கு.பிச்சாண்டி, மு.பெ.கிரி, மாவட்ட அவைத் தலைவர் வேணுகோபால், முன்னாள் நகரமன்ற தலைவர் ஸ்ரீதரன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் அண்ணாதுரை, டாக்டர் எ.வே.கம்பன், ஏ.ஏ. ஆறுமுகம் மற்றும் விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், ம.தி.மு.க., கம்யூனிஸ்டு, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் என சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த திருவண்ணாமலை உதவி போலீஸ் சூப்பிரண்டு ரவாளிபிரியா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரங்கராஜன் மற்றும் போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.க்கள் எ.வ.வேலு, கு.பிச்சாண்டி, மு.பெ.கிரி உள்பட 300-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

Next Story