அ.தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டம்
திருவள்ளூர், காஞ்சீபுரத்தில் அ.தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் ஆயில் மில் பகுதியில் நேற்று திருவள்ளூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும் காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டக்கோரியும், தமிழக வாழ்வாதாரத்தையும், தமிழக விவசாயிகளின் நலன்களை காத்திடவும், மத்திய அரசை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு அமைச்சர் பென்ஜமின் தலைமை தாங்கினார். திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் சிறுணியம் பலராமன், கிழக்கு மாவட்ட செயலாளர் அலெக்சாண்டர், மாநில மகளிர் அணி இணை செயலாளர் அழகுதமிழ்ச்செல்வி, மாநில எம்.ஜி.ஆர். இளைஞரணி இணை செயலாளர் செவ்வை சம்பத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் ஜே.சி.டி.பிரபாகரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, திருவள்ளூர் முன்னாள் நகர்மன்ற தலைவர் கமாண்டோ பாஸ்கரன், எம்.எல்.ஏ.க்கள் நரசிம்மன், விஜயகுமார், மாவட்ட பொருளாளர் ஜெயபால், ஒன்றிய செயலாளர்கள் புட்லூர் ஆர்.சந்திரசேகர், காட்டுப்பாக்கம் திருநாவுக்கரசு, சூரகாபுரம் கே.சுதாகர், மாவட்ட துணை செயலாளர் சிற்றம் சீனிவாசன், கடம்பத்தூர் ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
காஞ்சீபுரம் பஸ்நிலையம் அருகில் காஞ்சீபுரம் மேற்கு, கிழக்கு, மத்திய மாவட்ட அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
இந்த போராட்டத்தில் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர்கள் வாலாஜாபாத் பா.கணேசன், சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம், அமைப்பு செயலாளர்கள் வி.சோமசுந்தரம், மைதிலி திருநாவுக்கரசு ஆகியோர் கலந்து கொண்டு உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்கள்.
இதில் ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. கே.பழனி, அ.தி.மு.க. அவைத்தலைவர் குண்ணவாக்கம் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் எம்.பி. பன்னீர்செல்வம், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் கே.யூ.எஸ்.சோமசுந்தரம், மாவட்ட மாணவரணி செயலாளர் வீ.வள்ளிநாயகம், முன்னாள் ஒன்றிய குழுத்தலைவர் தென்னேரி என்.எம்.வரதராஜுலு, மாவட்ட இளைஞரணி செயலாளர் எஸ்.எஸ்.ஆர்.சத்யா, மாவட்ட பிரதிநிதி ஆர்.வி.ரஞ்சித்குமார், ஒன்றிய செயலாளர்கள் தும்பவனம் டி.ஜீவானந்தம், நாகராஜன், முனுசாமி உள்பட ஏராளமான அ.தி.மு.க. வினர் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story