காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நீலகிரியில் வியாபாரிகள் கடையடைப்பு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நீலகிரியில் வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் ரூ.2 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
ஊட்டி,
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட பின்னரும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அரசியல் கட்சியினர், மாணவர்கள் மற்றும் விவசாயிகள் போராட்டத்தில் குதித்து உள்ளனர். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது.
அதன்படி, ஊட்டி நகர வியாபாரிகள் சங்கம் சார்பில், காவிரி நதிநீர் பங்கீடு குறித்த சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மதித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து ஊட்டி நகராட்சி மார்க்கெட், கமர்சியல் சாலை, மெயின் பஜார், லோயர் பஜார், சேரிங்கிராஸ், புளுமவுண்டன், அப்பர் பஜார், பிங்கர்போஸ்ட், காந்தல், தலைகுந்தா உள்ளிட்ட பகுதிகளில் மளிகைக் கடை, ஓட்டல், பேக்கரி, தேநீர் விடுதி, சாக்லேட் மற்றும் வர்க்கி கடை, நீலகிரி தைலம் கடைகள், மருந்து கடைகள், நகை மற்றும் அடகு கடைகள் உள்பட நீலகிரி மாவட்டம் முழுவதும் உள்ள கடைகள் அனைத்தும் நேற்று அடைக்கப்பட்டு இருந்தன.
ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள உழவர் சந்தையில் 82 கடைகள் உள்ளன. இங்கு விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் விளையும் காய்கறிகளை அறுவடை செய்து கொண்டு வந்து பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர். கடையடைப்பு போராட்டம் மற்றும் காவிரி டெல்டா விவசாயிகளுக்கு ஆதரவாக நேற்று 82 கடைகளும் அடைக்கப்பட்டு தார்பாய் போட்டு மூடப்பட்டு இருந்தது. இதனால் எப்போதும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும் உழவர் சந்தை கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டதை காண முடிந்தது.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா அருகே உள்ள திபெத்தியன் மார்க்கெட் வியாபாரிகள் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக நேற்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர். ரெடிமேடு, சால்வை, உல்லன், தொப்பி, குழந்தைகள் அணியும் துணிகள், அணிகலன்கள் உள்ளிட்ட 150 கடைகள் பூட்டு போட்டு மூடப்பட்டு இருந்தன. இதனால் தாவரவியல் பூங்காவுக்கு வந்த சுற்றுலா பயணிகள் திபெத்தியன் மார்க்கெட்டில் தங்களுக்கு தேவையான பொருட்கள் மற்றும் துணிகளை வாங்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். சுற்றுலா நகரமான ஊட்டியில் சுற்றுலா வாகனங்கள், ஆட்டோக்கள் வழக்கம்போல் இயங்கின.
இதுகுறித்து நீலகிரி மாவட்ட உணவக உரிமையாளர்கள் சங்கர் முகமது ஜாபர் கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் உள்ள நகரங்களில் 700 கடைகள், சிறு கடைகள் உள்பட மாவட்டம் முழுவதும் மொத்தம் 20 ஆயிரம் கடைகள் உள்ளன. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து அந்த கடைகள் அனைத்தும் நேற்று அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் நீலகிரியில் ரூ.2 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது. கடை வியாபாரிகளுக்கு காய்கறிகள், பழங்கள் விற்பனை ஆகாமல் போனதால் நஷ்டம் ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் முழுவதும் 15 ஆயிரம் லிட்டர் பால் விற்பனை பாதிக்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நேற்று கோத்தகிரி மற்றும் அதன் சுற்ற வட்டார பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், கடைகள், மருந்து கடைகள் போன்றவை அடைக்கப்பட்டு இருந்தன. கடையடைப்பு போராட்டத்துக்கு கோத்தகிரி டாக்சி, சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் ஆதரவு தெரிவித்து வாகனங்களை இயக்கவில்லை. கடையடைப்பு காரணமாக எப்போதும் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த கோத்தகிரி நகர்பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.
குன்னூரில் வியாபாரிகள் சங்கம் சார்பில் மார்க்கெட்டில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. மேல்குன்னூர், பெட்போர்டு சர்க்கிள், அருவங்காடு, கொலக்கம்பை உள்ளிட்ட பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. குன்னூர் அருகே உள்ள தூதுர்மட்டம் கிராமத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி வீடுகள் மற்றும் கடைகளில் கருப்பு கொடி ஏற்றினர். பின்னர் விவசாயிகளும், பொதுமக்களும் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மஞ்சூர் பஜாரில் நேற்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. இதேபோல் பிக்கட்டி, இத்தலார், பெங்கால்மட்டம் ஆகிய பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து கூடலூர், தொரப்பள்ளி, ஸ்ரீமதுரை, தேவர்சோலை, பாடந்தொரை, நாடுகாணி, தேவாலா உள்பட அனைத்து இடங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. அரசு பஸ்கள், ஆட்டோ, ஜீப், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்பட்டன.
இதேபோல் கேரள, கர்நாடகா அரசு பஸ்கள் இயங்கின. கேரள, கர்நாடகா மாநில சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அதிகளவு இயக்கப்பட்டன. மேலும் பஸ்களிலும் பயணிகள் கூட்டம் பரவலாக காணப்பட்டது. வாகனங்கள் இயங்கினாலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால் சுற்றுலா பயணிகள் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அவதிப்பட்டனர்.
பந்தலூர் தாலுகாவில் உள்ள பந்தலூர், உப்பட்டி, கொளப்பள்ளி, சேரம்பாடி, எருமாடு உள்பட அனைத்து பகுதியிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் முக்கிய பஜார்களில் மக்கள் கூட்டம் குறைவாக இருந்தது.

Related Tags :
Next Story