ஊட்டியில் அ.தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நேற்று ஊட்டியில் அ.தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊட்டி,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நீலகிரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஊட்டி ஏ.டி.சி. திடலில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
இதற்கு அண்ணா தொழிற்சங்க பேரவை மாநில பொறுப்பாளர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் கே.ஆர்.அர்ஜூணன் எம்.பி., முன்னாள் அமைச்சர் புத்திசந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த உண்ணாவிரத போராட்டம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்தது. போராட்டத்தில் கே.ஆர்.அர்ஜூணன் எம்.பி. பேசியதாவது:-
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை ஏற்று காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தியும், அமைக்காமல் காலம் தாழ்த்தி வரும் மத்திய அரசை கண்டித்தும் கட்சியின் ஒருங்கிணைப் பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடத்த வேண்டும் என்று அறிவித்து இருந்தனர். அதன்படி, இன்று (நேற்று) உண்ணாவிரத பேராட்டம் நடக்கிறது.
அ.தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் நாடாளுமன்றத்திலேயே போராட்டம் நடத்தி அவையை நடத்த விடாமல் முடக்கி உள்ளனர். காவிரி நீர் முறைப்படுத்தும் குழுமை உடனடியாக அமைக்க வேண்டும். காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டும். தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் நலன்களை மத்திய அரசு காக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் குன்னூர் சாந்தி ராமு எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் ஆ.மில்லர், இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் வினோத், முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பசாமி, இன்கோசர்வ் தலைவர் சிவக்குமார், வெலிங்டன் கண்டோன்மெண்ட் துணைத்தலைவர் பாரதியார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story