பெரம்பலூரில் ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் 10-ந்தேதி நடக்கிறது
பெரம்பலூரில் ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் வருகிற 10-ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி எம்.ஜி.ஆர். விளையாட்டரங்கில் செய்யப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர், அரியலூர், கன்னியாகுமரி, கரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதி இளைஞர்களுக்கான ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் பெரம்பலூர் மாவட்டத்தில் வருகிற 10-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை, மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்த ஆள்சேர்ப்பு முகாமிற்காக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த முன்னேற்பாட்டு கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) அழகிரிசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முகாம் நடைபெறும் இடம், ஆள்சேர்ப்பு பணிகளுக்காக வருகை தரவுள்ள ராணுவ அலுவலர்கள் தங்கும் இடம், சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள், உடற் தகுதித்தேர்வு, மருத்துவ தேர்வு நடத்துவதற்கான செய்ய வேண்டிய வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், சுகாதார வசதிகள், உணவு வழங்குதல், குடிநீர் வழங்குதல், ஆள்சேர்ப்பு முகாமிற்கு அதிக அளவிலான இளைஞர்கள் கலந்து கொள்ளும் வகையில், விளம்பர பணிகள் மேற்கொள்வது ஆகியவை குறித்து தொடர்புடைய அலுவலர் களிடம் ஆலோசனை நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) அழகிரிசாமி பேசுகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் இரண்டாவது முறையாக இராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த ஆள் சேர்ப்பு முகாமினை நடத்திட அனைத்து அலுவலர்களும் ஒன்றினைந்து செயல்பட வேண்டும். இந்த ராணுவ ஆள்சேர்ப்பு முகாமிற்கு 10,000-த்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
எனவே முகாமிற்கு வருகைத்தரும் இளைஞர்களுக்கு தேவையான குடிநீரை மற்றும் கழிவறைகளை நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும், தேர்வுகள் நடத்தப்படும் அனைத்து இடங் களிலும் பாதுகாப்பு வளையங்கள் தகுந்த முறையில் பொதுப்பணித்துறையினர் அமைக்க வேண்டும். அனைத்து பகுதிகளிலும் தேவையான அளவில் காவல்துறை அலுவலர்கள் பாதுகாப்பு பணியினை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்திலுள்ள எம்.ஜி.ஆர். விளையாட்டரங்கிற்கு மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) அழகிரிசாமி, இயக்குனர் (ராணுவ ஆள் சேர்ப்பு, திருச்சிராப்பள்ளி) கர்னல் ரஜனீலால் ஆகியோர் நேரடியாக சென்று, விளையாட்டு மைதானம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு செய்து, முகாமை சிறப்பாக நடத்துவதற்கு தேவையான கட்டமைப்புகளை ஏற்படுத்துவதற்கு தேவையான அறிவுரைகளை வழங்கினர்.
அப்போது ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ஸ்ரீதர், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) பிரகாஷ் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள், காவல்துறை அலுவலர்கள் உள்பட அனைத்துதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்்.

Related Tags :
Next Story